Upadesa Undiyar by Ramana Maharshi Pāyiram Prefatory verse by Sri Muruganar கன்மமய றீர்ந்துகதி காண நெறிமுறையின் மன்மமுல குய்ய வழங்குகெனச் — சொன்முருகற் கெந்தைரம ணன்றொகுத் தீந்தா னுபதேச வுந்தியாரVF29் ஞானவிளக் கோர். kaṉmamaya ṯīrndugati kāṇa neṟimuṟaiyiṉ maṉmamula huyya vaṙaṅguheṉac — coṉmurugaṟ kendairama ṇaṉḏṟohut tīndā ṉupadēśa vundiyār ñāṉaviḷak kōr. Upōdghātam verse 1 Introductory verse by Sri Muruganar தாரு வனத்திற் றவஞ்செய் திருந்தவர் பூருவ கன்மத்தா லுந்தீபற போக்கறை போயின ருந்தீபற. dāru vaṉattiṯ ṟavañcey dirundavar pūruva kaṉmattā lundīpaṟa pōkkaṟai pōyiṉa rundīpaṟa. Upōdghātam verse 2 Introductory verse by Sri Muruganar கன்மத்தை யன்றிக் கடவு ளிலையெனும் வன்மத்த ராயின ருந்தீபற வஞ்சச் செருக்கினா லுந்தீபற. kaṉmattai yaṉḏṟik kaḍavu ḷilaiyeṉum vaṉmatta rāyiṉa rundīpaṟa vañjac cerukkiṉā lundīpaṟa. Upōdghātam verse 3 Introductory verse by Sri Muruganar கன்ம பலந்தருங் கர்த்தற் பழித்துச்செய் கன்ம பலங்கண்டா ருந்தீபற கர்வ மகன்றன ருந்தீபற. kaṉma phalandaruṅ karttaṟ paṙittuccey kaṉma phalaṅkaṇḍā rundīpaṟa garva mahaṉḏṟaṉa rundīpaṟa. Upōdghātam verse 4 Introductory verse by Sri Muruganar காத்தரு ளென்று கரையக் கருணைக்கண் சேர்த்தருள் செய்தன னுந்தீபற சிவனுப தேசமி துந்தீபற. kāttaru ḷeṉḏṟu karaiyak karuṇaikkaṇ sērttaruḷ seydaṉa ṉundīpaṟa śivaṉupa dēśami dundīpaṟa. Upōdghātam verse 5 Introductory verse by Sri Muruganar உட்கொண் டொழுக வுபதேச சாரத்தை யுட்கொண் டெழுஞ்சுக முந்தீபற வுட்டுன் பொழிந்திடு முந்தீபற. uṭkoṇ ḍoṙuha vupadēśa sārattai yuṭkoṇ ḍeṙuñsukha mundīpaṟa vuṭṭuṉ boṙindiḍu mundīpaṟa. Upōdghātam verse 6 Introductory verse by Sri Muruganar சார வுபதேச சாரமுட் சாரவே சேரக் களிசேர வுந்தீபற தீரத் துயர்தீர வுந்தீபற. sāra vupadēśa sāramuṭ cāravē sērak kaḷisēra vundīpaṟa tīrat tuyartīra vundīpaṟa. Verse 1 கன்மம் பயன்றரல் கர்த்தன தாணையாற் கன்மங் கடவுளோ வுந்தீபற கன்மஞ் சடமதா லுந்தீபற. kaṉmam payaṉḏṟaral karttaṉa dāṇaiyāṟ kaṉmaṅ kaḍavuḷō vundīpaṟa kaṉmañ jaḍamadā lundīpaṟa. Verse 2 வினையின் விளைவு விளிவுற்று வித்தாய் வினைக்கடல் வீழ்த்திடு முந்தீபற வீடு தரலிலை யுந்தீபற. viṉaiyiṉ viḷaivu viḷivuṯṟu vittāy viṉaikkaḍal vīṙttiḍu mundīpaṟa vīḍu taralilai yundīpaṟa. Verse 3 கருத்தனுக் காக்குநிட் காமிய கன்மங் கருத்தைத் திருத்தியஃ துந்தீபற கதிவழி காண்பிக்கு முந்தீபற. karuttaṉuk kākkuniṭ kāmiya kaṉmaṅ karuttait tiruttiyaḵ dundīpaṟa gativaṙi kāṇbikku mundīpaṟa. Verse 4 திடமிது பூசை செபமுந் தியான முடல்வாக் குளத்தொழி லுந்தீபற வுயர்வாகு மொன்றிலொன் றுந்தீபற. diḍamidu pūjai jepamun dhiyāṉa muḍalvāk kuḷattoṙi lundīpaṟa vuyarvāhu moṉḏṟiloṉ ḏṟundīpaṟa. Verse 5 எண்ணுரு யாவு மிறையுரு வாமென வெண்ணி வழிபட லுந்தீபற வீசனற் பூசனை யுந்தீபற. eṇṇuru yāvu miṟaiyuru vāmeṉa veṇṇi vaṙipaḍa lundīpaṟa vīśaṉaṯ pūjaṉai yundīpaṟa. Verse 6 வழுத்தலில் வாக்குச்ச வாய்க்குட் செபத்தில் விழுப்பமா மானத முந்தீபற விளம்புந் தியானமி துந்தீபற. vaṙuttalil vākkucca vāykkuṭ jepattil viṙuppamā māṉata mundīpaṟa viḷambun dhiyāṉami dundīpaṟa. Verse 7 விட்டுக் கருதலி னாறுநெய் வீழ்ச்சிபோல் விட்டிடா துன்னலே யுந்தீபற விசேடமா முன்னவே யுந்தீபற. viṭṭuk karudali ṉāṟuney vīṙccipōl viṭṭiḍā duṉṉalē yundīpaṟa viśēḍamā muṉṉavē yundīpaṟa. Verse 8 அனியபா வத்தி னவனக மாகு மனனிய பாவமே யுந்தீபற வனைத்தினு முத்தம முந்தீபற. aṉiyabhā vatti ṉavaṉaha māhu maṉaṉiya bhāvamē yundīpaṟa vaṉaittiṉu muttama mundīpaṟa. Verse 9 பாவ பலத்தினாற் பாவனா தீதசற் பாவத் திருத்தலே யுந்தீபற பரபத்தி தத்துவ முந்தீபற. bhāva balattiṉāṯ bhāvaṉā tītasaṯ bhāvat tiruttalē yundīpaṟa parabhatti tattuva mundīpaṟa. Verse 10 உதித்த விடத்தி லொடுங்கி யிருத்த லதுகன்மம் பத்தியு முந்தீபற வதுயோக ஞானமு முந்தீபற. uditta viḍatti loḍuṅgi yirutta ladukaṉmam bhattiyu mundīpaṟa vaduyōga ñāṉamu mundīpaṟa. Verse 11 வளியுள் ளடக்க வலைபடு புட்போ லுளமு மொடுங்குறு முந்தீபற வொடுக்க வுபாயமி துந்தீபற. vaḷiyuḷ ḷaḍakka valaipaḍu puṭpō luḷamu moḍuṅguṟu mundīpaṟa voḍukka vupāyami dundīpaṟa. Verse 12 உளமு முயிரு முணர்வுஞ் செயலு முளவாங் கிளையிரண் டுந்தீபற வொன்றவற் றின்மூல முந்தீபற. uḷamu muyiru muṇarvuñ ceyalu muḷavāṅ kiḷaiyiraṇ ḍundīpaṟa voṉḏṟavaṯ ṟiṉmūla mundīpaṟa. Verse 13 இலயமு நாச மிரண்டா மொடுக்க மிலயித் துளதெழு முந்தீபற வெழாதுரு மாய்ந்ததே லுந்தீபற. ilayamu nāśa miraṇḍā moḍukka milayit tuḷadeṙu mundīpaṟa veṙāduru māyndadē lundīpaṟa. Verse 14 ஒடுக்க வளியை யொடுங்கு முளத்தை விடுக்கவே யோர்வழி யுந்தீபற வீயு மதனுரு வுந்தீபற. oḍukka vaḷiyai yoḍuṅgu muḷattai viḍukkavē yōrvaṙi yundīpaṟa vīyu madaṉuru vundīpaṟa. Verse 15 மனவுரு மாயமெய்ம் மன்னுமா யோகி தனக்கோர் செயலிலை யுந்தீபற தன்னியல் சார்ந்தன னுந்தீபற. maṉavuru māyameym maṉṉumā yōgi taṉakkōr seyalilai yundīpaṟa taṉṉiyal sārndaṉa ṉundīpaṟa. Verse 16 வெளிவிட யங்களை விட்டு மனந்தன் னொளியுரு வோர்தலே யுந்தீபற வுண்மை யுணர்ச்சியா முந்தீபற. veḷiviḍa yaṅgaḷai viṭṭu maṉantaṉ ṉoḷiyuru vōrdalē yundīpaṟa vuṇmai yuṇarcciyā mundīpaṟa. Verse 17 மனத்தி னுருவை மறவா துசாவ மனமென வொன்றிலை யுந்தீபற மார்க்கநே ரார்க்குமி துந்தீபற. maṉatti ṉuruvai maṟavā dusāva maṉameṉa voṉḏṟilai yundīpaṟa mārgganē rārkkumi dundīpaṟa. Verse 18 எண்ணங்க ளேமனம் யாவினு நானெனு மெண்ணமே மூலமா முந்தீபற யானா மனமென லுந்தீபற. eṇṇaṅga ḷēmaṉam yāviṉu nāṉeṉu meṇṇamē mūlamā mundīpaṟa yāṉā maṉameṉa lundīpaṟa. Verse 19 நானென் றெழுமிட மேதென நாடவுண் ணான்றலை சாய்ந்திடு முந்தீபற ஞான விசாரமி துந்தீபற. nāṉeṉ ḏṟeṙumiḍa mēdeṉa nāḍavuṇ ṇāṉḏṟalai sāyndiḍu mundīpaṟa ñāṉa vicārami dundīpaṟa. Verse 20 நானொன்று தானத்து நானானென் றொன்றது தானாகத் தோன்றுமே யுந்தீபற தானது பூன்றமா முந்தீபற. nāṉoṉḏṟu thāṉattu nāṉāṉeṉ ḏṟoṉḏṟadu tāṉāhat tōṉḏṟumē yundīpaṟa tāṉadu pūṉḏṟamā mundīpaṟa. Verse 21 நானெனுஞ் சொற்பொரு ளாமது நாளுமே நானற்ற தூக்கத்து முந்தீபற நமதின்மை நீக்கத்தா லுந்தீபற. nāṉeṉuñ coṯporu ḷāmadu nāḷumē nāṉaṯṟa tūkkattu mundīpaṟa namadiṉmai nīkkattā lundīpaṟa. Verse 22 உடல்பொறி யுள்ள முயிரிரு ளெல்லாஞ் சடமசத் தானதா லுந்தீபற சத்தான நானல்ல வுந்தீபற. uḍalpoṟi yuḷḷa muyiriru ḷellāñ jaḍamasat tāṉadā lundīpaṟa sattāṉa nāṉalla vundīpaṟa. Verse 23 உள்ள துணர வுணர்வுவே றின்மையி னுள்ள துணர்வாகு முந்தீபற வுணர்வேநா மாயுள முந்தீபற. uḷḷa duṇara vuṇarvuvē ṟiṉmaiyi ṉuḷḷa duṇarvāhu mundīpaṟa vuṇarvēnā māyuḷa mundīpaṟa. Verse 24 இருக்கு மியற்கையா லீசசீ வர்க ளொருபொரு ளேயாவ ருந்தீபற வுபாதி யுணர்வேவே றுந்தீபற. irukku miyaṟkaiyā līśajī varga ḷoruporu ḷēyāva rundīpaṟa vupādhi yuṇarvēvē ṟundīpaṟa. Verse 25 தன்னை யுபாதிவிட் டோர்வது தானீசன் றன்னை யுணர்வதா முந்தீபற தானா யொளிர்வதா லுந்தீபற. taṉṉai yupādhiviṭ ṭōrvadu tāṉīśaṉ ḏṟaṉṉai yuṇarvadā mundīpaṟa tāṉā yoḷirvadā lundīpaṟa. Verse 26 தானா யிருத்தலே தன்னை யறிதலாந் தானிரண் டற்றதா லுந்தீபற தன்மய நிட்டையீ துந்தீபற. tāṉā yiruttalē taṉṉai yaṟidalān tāṉiraṇ ḍaṯṟadā lundīpaṟa taṉmaya niṭṭhaiyī dundīpaṟa. Verse 27 அறிவறி யாமையு மற்ற வறிவே யறிவாகு முண்மையீ துந்தீபற வறிவதற் கொன்றிலை யுந்தீபற. aṟivaṟi yāmaiyu maṯṟa vaṟivē yaṟivāhu muṇmaiyī dundīpaṟa vaṟivadaṟ koṉḏṟilai yundīpaṟa. Verse 28 தனாதியல் யாதெனத் தான்றெரி கிற்பின் னனாதி யனந்தசத் துந்தீபற வகண்ட சிதானந்த முந்தீபற. taṉādiyal yādeṉat tāṉḏṟeri hiṟpiṉ ṉaṉādi yaṉantasat tundīpaṟa vakhaṇḍa cidāṉanda mundīpaṟa. Verse 29 பந்தவீ டற்ற பரசுக முற்றவா றிந்த நிலைநிற்ற லுந்தீபற விறைபணி நிற்றலா முந்தீபற. bandhavī ḍaṯṟa parasukha muṯṟavā ṟinda nilainiṯṟa lundīpaṟa viṟaipaṇi niṯṟalā mundīpaṟa. Verse 30 யானற் றியல்வது தேரி னெதுவது தானற் றவமென்றா னுந்தீபற தானாம் ரமணேச னுந்தீபற. yāṉaṯ ṟiyalvadu tēri ṉeduvadu dāṉaṯ ṟavameṉḏṟā ṉundīpaṟa tāṉām ramaṇēśa ṉundīpaṟa. Vāṙttu verse 1 Concluding verse of praise by Sri Muruganar இருடிக ளெல்லா மிறைவ னடியை வருடி வணங்கின ருந்தீபற வாழ்த்து முழங்கின ருந்தீபற. iruḍiga ḷellā miṟaiva ṉaḍiyai varuḍi vaṇaṅgiṉa rundīpaṟa vāṙttu muṙaṅgiṉa rundīpaṟa. Vāṙttu verse 2 Concluding verse of praise by Sri Muruganar உற்றார்க் குறுதி யுபதேச வுந்தியார் சொற்ற குருபர னுந்தீபற சுமங்கள வேங்கட னுந்தீபற. uṯṟārk kuṟudi yupadēśa vundiyār soṯṟa gurupara ṉundīpaṟa sumaṅgaḷa vēṅkaṭa ṉundīpaṟa. Vāṙttu verse 3 Concluding verse of praise by Sri Muruganar பல்லாண்டு பல்லாண்டு பற்பன்னூ றாயிரம் பல்லாண்டு பல்லாண்டு முந்தீபற பார்மிசை வாழ்கவே யுந்தீபற. pallāṇḍu pallāṇḍu paṯpaṉṉū ṟāyiram pallāṇḍu pallāṇḍu mundīpaṟa pārmisai vāṙgavē yundīpaṟa. Vāṙttu verse 4 Concluding verse of praise by Sri Muruganar இசையெடுப் போருஞ் செவிமடுப் போரும் வசையறத் தேர்வோரு முந்தீபற வாழி பலவூழி யுந்தீபற. isaiyeḍup pōruñ cevimaḍup pōrum vasaiyaṟat tērvōru mundīpaṟa vāṙi palavūṙi yundīpaṟa. Vāṙttu verse 5 Concluding verse of praise by Sri Muruganar கற்கு மவர்களுங் கற்றுணர்ந் தாங்குத்தா நிற்கு மவர்களு முந்தீபற நீடூழி வாழியே யுந்தீபற. kaṟku mavargaḷuṅ kaṯṟuṇarn dāṅguttā niṟku mavargaḷu mundīpaṟa nīḍūṙi vāṙiyē yundīpaṟa.