Ulladu Narpadu by Ramana Maharshi பாயிரம் (pāyiram): Introductory Verse மெய்யி னியல்புமதை மேவுந் திறனுமெமக் குய்யும் படிமுருக னோதுகெனப் — பொய்யுலகின் கள்ளமறு மாற்றாற் கனரமணன் கட்டுரைத்தா னுள்ளது நாற்ப துவந்து. meyyi ṉiyalbumadai mēvun tiṟaṉumemak kuyyum paḍimuruga ṉōdukeṉap — poyyulahiṉ kaḷḷamaṟu māṯṟāṯ gaṉaramaṇaṉ kaṭṭuraittā ṉuḷḷadu nāṟpa duvandu. Maṅgalam (benedictory) verse 1 உள்ளதல துள்ளவுணர் வுள்ளதோ வுள்ளபொரு ளுள்ளலற வுள்ளத்தே யுள்ளதா — லுள்ளமெனு முள்ளபொரு ளுள்ளலெவ னுள்ளத்தே யுள்ளபடி யுள்ளதே யுள்ள லுணர். uḷḷadala duḷḷavuṇar vuḷḷadō vuḷḷaporu ḷuḷḷalaṟa vuḷḷattē yuḷḷadā — luḷḷameṉu muḷḷaporu ḷuḷḷaleva ṉuḷḷattē yuḷḷapaḍi yuḷḷadē yuḷḷa luṇar. Maṅgalam (benedictory) verse 2 மரணபய மிக்குளவம் மக்களர ணாக மரணபவ மில்லா மகேசன் — சரணமே சார்வர்தஞ் சார்வொடுதாஞ் சாவுற்றார் சாவெண்ணஞ் சார்வரோ சாவா தவர். maraṇabhaya mikkuḷavam makkaḷara ṇāha maraṇabhava millā mahēśaṉ — caraṇamē sārvartañ cārvoḍutāñ cāvuṯṟār sāveṇṇañ cārvarō sāvā davar. Verse 1 நாமுலகங் காண்டலா னானாவாஞ் சத்தியுள வோர்முதலை யொப்ப லொருதலையே — நாமவுருச் சித்திரமும் பார்ப்பானுஞ் சேர்படமு மாரொளியு மத்தனையுந் தானா மவன். nāmulahaṅ kāṇḍalā ṉāṉāvāñ cattiyuḷa vōrmudalai yoppa lorutalaiyē — nāmavuruc cittiramum pārppāṉuñ cērpaḍamu māroḷiyu mattaṉaiyun tāṉā mavaṉ. Verse 2 மும்முதலை யெம்மதமு முற்கொள்ளு மோர்முதலே மும்முதலாய் நிற்குமென்று மும்முதலு — மும்முதலே யென்னலகங் கார மிருக்குமட்டே யான்கெட்டுத் தன்னிலையி னிற்ற றலை. mummudalai yemmatamu muṟkoḷḷu mōrmudalē mummudalāy niṟkumeṉḏṟu mummudalu — mummudalē yeṉṉalahaṅ kāra mirukkumaṭṭē yāṉkeṭṭut taṉṉilaiyi ṉiṯṟa ṯalai. Verse 3 உலகுமெய்பொய்த் தோற்ற முலகறிவா மன்றென் றுலகுசுக மன்றென் றுரைத்தெ — னுலகுவிட்டுத் தன்னையோர்ந் தொன்றிரண்டு தானற்று நானற்ற வந்நிலையெல் லார்க்குமொப் பாம். ulahumeypoyt tōṯṟa mulahaṟivā maṉḏṟeṉ ḏṟulahusukha maṉḏṟeṉ ḏṟuraitte — ṉulahuviṭṭut taṉṉaiyōrn doṉḏṟiraṇḍu tāṉaṯṟu nāṉaṯṟa vannilaiyel lārkkumop pām. Verse 4 உருவந்தா னாயி னுலகுபர மற்றா முருவந்தா னன்றே லுவற்றி — னுருவத்தைக் கண்ணுறுதல் யாவனெவன் கண்ணலாற் காட்சியுண்டோ கண்ணதுதா னந்தமிலாக் கண். uruvandā ṉāyi ṉulahupara maṯṟā muruvandā ṉaṉḏṟē luvaṯṟi — ṉuruvattaik kaṇṇuṟudal yāvaṉevaṉ kaṇṇalāṯ kāṭciyuṇḍō kaṇṇadutā ṉantamilāk kaṇ. Verse 5 உடல்பஞ்ச கோச வுருவதனா லைந்து முடலென்னுஞ் சொல்லி லொடுங்கு — முடலன்றி யுண்டோ வுலக முடல்விட் டுலகத்தைக் கண்டா ருளரோ கழறு. uḍalpañca kōśa vuruvadaṉā laindu muḍaleṉṉuñ colli loḍuṅgu — muḍalaṉḏṟi yuṇḍō vulaha muḍalviṭ ṭulahattaik kaṇḍā ruḷarō kaṙaṟu. Verse 6 உலகைம் புலன்க ளுருவேறன் றவ்வைம் புலனைம் பொறிக்குப் புலனா — முலகைமன மொன்றைம் பொறிவாயா லோர்ந்திடுத லான்மனத்தை யன்றியுல குண்டோ வறை. ulahaim pulaṉga ḷuruvēṟaṉ ḏṟavvaim pulaṉaim poṟikkup pulaṉā — mulahaimaṉa moṉḏṟaim poṟivāyā lōrndiḍuda lāṉmaṉattai yaṉḏṟiyula kuṇḍō vaṟai. Verse 7 உலகறிவு மொன்றா யுதித்தொடுங்கு மேனு முலகறிவு தன்னா லொளிரு — முலகறிவு தோன்றிமறை தற்கிடனாய்த் தோன்றிமறை யாதொளிரும் பூன்றமா மஃதே பொருள். ulahaṟivu moṉḏṟā yudittoḍuṅgu mēṉu mulahaṟivu taṉṉā loḷiru — mulahaṟivu tōṉḏṟimaṟai daṟkiḍaṉāyt tōṉḏṟimaṟai yādoḷirum pūṉḏṟamā maḵdē poruḷ. Verse 8 எப்பெயரிட் டெவ்வுருவி லேத்தினுமார் பேருருவி லப்பொருளைக் காண்வழிய தாயினுமம் — மெய்ப்பொருளி னுண்மையிற்ற னுண்மையினை யோர்ந்தொடுங்கி யொன்றுதலே யுண்மையிற் காண லுணர். eppeyariṭ ṭevvuruvi lēttiṉumār pēruruvi lapporuḷaik kāṇvaṙiya dāyiṉumam — meypporuḷi ṉuṇmaiyiṯṟa ṉuṇmaiyiṉai yōrndoḍuṅgi yoṉḏṟudalē yuṇmaiyiṯ kāṇa luṇar. Verse 9 இரட்டைகண் முப்புடிக ளென்றுமொன்று பற்றி யிருப்பவா மவ்வொன்றே தென்று — கருத்தினுட் கண்டாற் கழலுமவை கண்டவ ரேயுண்மை கண்டார் கலங்காரே காண். iraṭṭaigaṇ muppuḍiga ḷeṉḏṟumoṉḏṟu paṯṟi yiruppavā mavvoṉḏṟē teṉḏṟu — karuttiṉuṭ kaṇḍāṯ kaṙalumavai kaṇḍava rēyuṇmai kaṇḍār kalaṅgārē kāṇ. Verse 10 அறியாமை விட்டறிவின் றாமறிவு விட்டவ் வறியாமை யின்றாகு மந்த — வறிவு மறியா மையுமார்க்கென் றம்முதலாந் தன்னை யறியு மறிவே யறிவு. aṟiyāmai viṭṭaṟiviṉ ḏṟāmaṟivu viṭṭav vaṟiyāmai yiṉḏṟāhu manda — vaṟivu maṟiyā maiyumārkkeṉ ḏṟammudalān taṉṉai yaṟiyu maṟivē yaṟivu. Verse 11 அறிவுறுந் தன்னை யறியா தயலை யறிவ தறியாமை யன்றி — யறிவோ வறிவயற் காதாரத் தன்னை யறிய வறிவறி யாமை யறும். aṟivuṟun taṉṉai yaṟiyā dayalai yaṟiva daṟiyāmai yaṉḏṟi — yaṟivō vaṟivayaṟ kādhārat taṉṉai yaṟiya vaṟivaṟi yāmai yaṟum. Verse 12 அறிவறி யாமையு மற்றதறி வாமே யறியும துண்மையறி வாகா — தறிதற் கறிவித்தற் கன்னியமின் றாயவிர்வ தாற்றா னறிவாகும் பாழன் றறி. aṟivaṟi yāmaiyu maṯṟadaṟi vāmē yaṟiyuma duṇmaiyaṟi vāhā — daṟitaṟ kaṟivittaṟ kaṉṉiyamiṉ ḏṟāyavirva dāṯṟā ṉaṟivāhum pāṙaṉ ḏṟaṟi. Verse 13 ஞானமாந் தானேமெய் நானாவா ஞானமஞ் ஞானமாம் பொய்யாமஞ் ஞானமுமே — ஞானமாந் தன்னையன்றி யின்றணிக டாம்பலவும் பொய்மெய்யாம் பொன்னையன்றி யுண்டோ புகல். ñāṉamān tāṉēmey nāṉāvā ñāṉamañ ñāṉamām poyyāmañ ñāṉamumē — ñāṉamān taṉṉaiyaṉḏṟi yiṉḏṟaṇiga ḍāmpalavum poymeyyām poṉṉaiyaṉḏṟi yuṇḍō puhal. Verse 14 தன்மையுண்டேன் முன்னிலைப டர்க்கைக டாமுளவாந் தன்மையி னுண்மையைத் தானாய்ந்து — தன்மையறின் முன்னிலைப டர்க்கை முடிவுற்றொன் றாயொளிருந் தன்மையே தன்னிலைமை தான். taṉmaiyuṇḍēṉ muṉṉilaipa ḍarkkaiga ḍāmuḷavān taṉmaiyi ṉuṇmaiyait tāṉāyndu — taṉmaiyaṟiṉ muṉṉilaipa ḍarkkai muḍivuṯṟoṉ ḏṟāyoḷirun taṉmaiyē taṉṉilaimai tāṉ. Verse 15 நிகழ்வினைப் பற்றி யிறப்பெதிர்வு நிற்ப நிகழ்கா லவையு நிகழ்வே — நிகழ்வொன்றே யின்றுண்மை தேரா திறப்பெதிர்வு தேரவுன லொன்றின்றி யெண்ண வுனல். nihaṙviṉaip paṯṟi yiṟappedirvu niṟpa nihaṙkā lavaiyu nihaṙvē — nihaṙvoṉḏṟē yiṉḏṟuṇmai tērā tiṟappedirvu tēravuṉa loṉḏṟiṉṟi yeṇṇa vuṉal. Verse 16 நாமன்றி நாளேது நாடேது நாடுங்கா னாமுடம்பே னாணாட்டு ணாம்படுவ — நாமுடம்போ நாமின்றன் றென்றுமொன்று நாடிங்கங் கெங்குமொன்றா னாமுண்டு நாணாடி னாம். nāmaṉḏṟi nāḷēdu nāḍēdu nāḍuṅgā ṉāmuḍambē ṉāṇāṭṭu ṇāmpaḍuva — nāmuḍambō nāmiṉḏṟaṉ ḏṟeṉḏṟumoṉḏṟu nāḍiṅgaṅ geṅgumoṉḏṟā ṉāmuṇḍu nāṇāḍi ṉām. Verse 17 உடனானே தன்னை யுணரார்க் குணர்ந்தார்க் குடலளவே நான்ற னுணரார்க் — குடலுள்ளே தன்னுணர்ந்தார்க் கெல்லையறத் தானொளிரு நானிதுவே யின்னவர்தம் பேதமென வெண். uḍaṉāṉē taṉṉai yuṇarārk kuṇarndārk kuḍalaḷavē nāṉḏṟa ṉuṇarārk — kuḍaluḷḷē taṉṉuṇarndārk kellaiyaṟat tāṉoḷiru nāṉiduvē yiṉṉavartam bhēdameṉa veṇ. Verse 18 உலகுண்மை யாகு முணர்வில்லார்க் குள்ளார்க் குலகளவா முண்மை யுணரார்க் — குலகினுக் காதார மாயுருவற் றாருமுணர்ந் தாருண்மை யீதாகும் பேதமிவர்க் கெண். ulahuṇmai yāhu muṇarvillārk kuḷḷārk kulahaḷavā muṇmai yuṇarārk — kulahiṉuk kādhāra māyuruvaṯ ṟārumuṇarn dāruṇmai yīdāhum bhēdamivark keṇ. Verse 19 விதிமதி மூல விவேக மிலார்க்கே விதிமதி வெல்லும் விவாதம் — விதிமதிகட் கோர்முதலாந் தன்னை யுணர்ந்தா ரவைதணந்தார் சார்வரோ பின்னுமவை சாற்று. vidhimati mūla vivēka milārkkē vidhimati vellum vivādam — vidhimatigaṭ kōrmudalān taṉṉai yuṇarndā ravaitaṇandār sārvarō piṉṉumavai sāṯṟu. Verse 20 காணுந் தனைவிட்டுத் தான்கடவு ளைக்காணல் காணு மனோமயமாங் காட்சிதனைக் — காணுமவன் றான்கடவுள் கண்டானாந் தன்முதலைத் தான்முதல்போய்த் தான்கடவு ளன்றியில தால். kāṇun taṉaiviṭṭut tāṉkaḍavu ḷaikkāṇal kāṇu maṉōmayamāṅ kāṭcitaṉaik — kāṇumavaṉ ḏṟāṉkaḍavuḷ kaṇḍāṉān taṉmudalait tāṉmudalpōyt tāṉkaḍavu ḷaṉḏṟiyila dāl. Verse 21 தன்னைத்தான் காண றலைவன் றனைக்காண லென்னும்பன் னூலுண்மை யென்னையெனின் — றன்னைத்தான் காணலெவன் றானொன்றாற் காணவொணா தேற்றலைவற் காணலெவ னூணாதல் காண். taṉṉaittāṉ kāṇa ṯalaivaṉ ḏṟaṉaikkāṇa leṉṉumpaṉ ṉūluṇmai yeṉṉaiyeṉiṉ — ḏṟaṉṉaittāṉ kāṇalevaṉ ḏṟāṉoṉḏṟāṯ kāṇavoṇā dēṯṟalaivaṯ kāṇaleva ṉūṇādal kāṇ. Verse 22 மதிக்கொளி தந்தம் மதிக்கு ளொளிரு மதியினை யுள்ளே மடக்கிப் — பதியிற் பதித்திடுத லன்றிப் பதியை மதியான் மதித்திடுத லெங்ஙன் மதி. matikkoḷi tandam matikku ḷoḷiru matiyiṉai yuḷḷē maḍakkip — patiyiṯ padittiḍuda laṉḏṟip patiyai matiyāṉ madittiḍuda leṅṅaṉ madi. Verse 23 நானென்றித் தேக நவிலா துறக்கத்து நானின்றென் றாரு நவில்வதிலை — நானொன் றெழுந்தபி னெல்லா மெழுமிந்த நானெங் கெழுமென்று நுண்மதியா லெண். nāṉeṉḏṟid dēha navilā duṟakkattu nāṉiṉḏṟeṉ ḏṟāru navilvadilai — nāṉoṉ ḏṟeṙundapi ṉellā meṙuminda nāṉeṅ geṙumeṉḏṟu nuṇmatiyā leṇ. Verse 24 சடவுடனா னென்னாது சச்சித் துதியா துடலளவா நானொன் றுதிக்கு — மிடையிலிது சிச்சடக்கி ரந்திபந்தஞ் சீவனுட்ப மெய்யகந்தை யிச்சமு சாரமன மெண். jaḍavuḍaṉā ṉeṉṉādu saccit tudiyā duḍalaḷavā nāṉoṉ ḏṟudikku — miḍaiyilidu ciccaḍakki ranthibandhañ jīvaṉuṭpa meyyahandai yiccamu sāramaṉa meṇ. Verse 25 உருப்பற்றி யுண்டா முருப்பற்றி நிற்கு முருப்பற்றி யுண்டுமிக வோங்கு — முருவிட் டுருப்பற்றுந் தேடினா லோட்டம் பிடிக்கு முருவற்ற பேயகந்தை யோர். uruppaṯṟi yuṇḍā muruppaṯṟi niṟku muruppaṯṟi yuṇḍumiha vōṅgu — muruviṭ ṭuruppaṯṟun tēḍiṉā lōṭṭam piḍikku muruvaṯṟa pēyahandai yōr. Verse 26 அகந்தையுண் டாயி னனைத்துமுண் டாகு மகந்தையின் றேலின் றனைத்து — மகந்தையே யாவுமா மாதலால் யாதிதென்று நாடலே யோவுதல் யாவுமென வோர். ahandaiyuṇ ḍāyi ṉaṉaittumuṇ ḍāhu mahandaiyiṉ ḏṟēliṉ ḏṟaṉaittu — mahandaiyē yāvumā mādalāl yādideṉḏṟu nāḍalē yōvudal yāvumeṉa vōr. Verse 27 நானுதியா துள்ளநிலை நாமதுவா யுள்ளநிலை நானுதிக்குந் தானமதை நாடாம — னானுதியாத் தன்னிழப்பைச் சார்வதெவன் சாராமற் றானதுவாந் தன்னிலையி னிற்பதெவன் சாற்று. nāṉudiyā duḷḷanilai nāmaduvā yuḷḷanilai nāṉudikkun thāṉamadai nāḍāma — ṉāṉudiyāt taṉṉiṙappaic cārvadevaṉ sārāmaṯ ṟāṉaduvān taṉṉilaiyi ṉiṟpadevaṉ sāṯṟu. Verse 28 எழும்பு மகந்தை யெழுமிடத்தை நீரில் விழுந்த பொருள்காண வேண்டி — முழுகுதல்போற் கூர்ந்தமதி யாற்பேச்சு மூச்சடக்கிக் கொண்டுள்ளே யாழ்ந்தறிய வேண்டு மறி. eṙumbu mahandai yeṙumiḍattai nīril viṙunda poruḷkāṇa vēṇḍi — muṙuhudalpōṯ kūrndamati yāṯpēccu mūccaḍakkik koṇḍuḷḷē yāṙndaṟiya vēṇḍu maṟi. Verse 29 நானென்று வாயா னவிலாதுள் ளாழ்மனத்தா னானென்றெங் குந்துமென நாடுதலே — ஞானநெறி யாமன்றி யன்றிதுநா னாமதுவென் றுன்னறுணை யாமதுவி சாரமா மா. nāṉeṉḏṟu vāyā ṉavilāduḷ ḷāṙmaṉattā ṉāṉeṉḏṟeṅ gundumeṉa nāḍudalē — ñāṉaneṟi yāmaṉḏṟi yaṉḏṟidunā ṉāmaduveṉ ḏṟuṉṉaṟuṇai yāmaduvi cāramā mā. Verse 30 நானா ரெனமனமுண் ணாடியுள நண்ணவே நானா மவன்றலை நாணமுற — நானானாத் தோன்றுமொன்று தானாகத் தோன்றினுநா னன்றுபொருள் பூன்றமது தானாம் பொருள். nāṉā reṉamaṉamuṇ ṇāḍiyuḷa naṇṇavē nāṉā mavaṉḏṟalai nāṇamuṟa — nāṉāṉāt tōṉḏṟumoṉḏṟu tāṉāhat tōṉḏṟiṉunā ṉaṉḏṟuporuḷ pūṉḏṟamadu tāṉām poruḷ. Verse 31 தன்னை யழித்தெழுந்த தன்மயா னந்தருக் கென்னை யுளதொன் றியற்றுதற்குத் — தன்னையலா தன்னிய மொன்று மறியா ரவர்நிலைமை யின்னதென் றுன்ன லெவன். taṉṉai yaṙitteṙunda taṉmayā ṉandaruk keṉṉai yuḷadoṉ ḏṟiyaṯṟudaṟkut — taṉṉaiyalā taṉṉiya moṉḏṟu maṟiyā ravarnilaimai yiṉṉadeṉ ḏṟuṉṉa levaṉ. Verse 32 அதுநீயென் றம்மறைக ளார்த்திடவுந் தன்னை யெதுவென்று தான்றேர்ந் திராஅ — ததுநா னிதுவன்றென் றெண்ணலுர னின்மையினா லென்று மதுவேதா னாயமர்வ தால். adunīyeṉ ḏṟammaṟaiga ḷārttiḍavun taṉṉai yeduveṉḏṟu tāṉḏṟērn dirāa — dadunā ṉiduvaṉḏṟeṉ ḏṟeṇṇalura ṉiṉmaiyiṉā leṉḏṟu maduvētā ṉāyamarva dāl. Verse 33 என்னை யறியேனா னென்னை யறிந்தேனா னென்ன னகைப்புக் கிடனாகு — மென்னை தனைவிடய மாக்கவிரு தானுண்டோ வொன்றா யனைவரனு பூதியுண்மை யால். eṉṉai yaṟiyēṉā ṉeṉṉai yaṟindēṉā ṉeṉṉa ṉahaippuk kiḍaṉāhu — meṉṉai taṉaiviḍaya mākkaviru tāṉuṇḍō voṉḏṟā yaṉaivaraṉu bhūtiyuṇmai yāl. Verse 34 என்று மெவர்க்கு மியல்பா யுளபொருளை யொன்று முளத்து ளுணர்ந்துநிலை — நின்றிடா துண்டின் றுருவருவென் றொன்றிரண் டன்றென்றே சண்டையிடன் மாயைச் சழக்கு. eṉḏṟu mevarkku miyalbā yuḷaporuḷai yoṉḏṟu muḷattu ḷuṇarndunilai — niṉḏṟiḍā duṇḍiṉ ḏṟuruvaruveṉ ḏṟoṉḏṟiraṇ ḍaṉḏṟeṉḏṟē caṇḍaiyiḍaṉ māyaic caṙakku. Verse 35 சித்தமா யுள்பொருளைத் தேர்ந்திருத்தல் சித்திபிற சித்தியெலாஞ் சொப்பனமார் சித்திகளே — நித்திரைவிட் டோர்ந்தா லவைமெய்யோ வுண்மைநிலை நின்றுபொய்ம்மை தீர்ந்தார் தியங்குவரோ தேர். siddhamā yuḷporuḷait tērndiruttal siddhipiṟa siddhiyelāñ soppaṉamār siddhikaḷē — niddiraiviṭ ṭōrndā lavaimeyyō vuṇmainilai niṉḏṟupoymmai tīrndār tiyaṅguvarō tēr. Verse 36 நாமுடலென் றெண்ணினல நாமதுவென் றெண்ணுமது நாமதுவா நிற்பதற்கு நற்றுணையே — யாமென்று நாமதுவென் றெண்ணுவதே னான்மனித னென்றெணுமோ நாமதுவா நிற்குமத னால். nāmuḍaleṉ ḏṟeṇṇiṉala nāmaduveṉ ḏṟeṇṇumadu nāmaduvā niṟpadaṟku naṯṟuṇaiyē — yāmeṉḏṟu nāmaduveṉ ḏṟeṇṇuvadē ṉāṉmaṉida ṉeṉḏṟeṇumō nāmaduvā niṟkumada ṉāl. Verse 37 சாதகத்தி லேதுவிதஞ் சாத்தியத்தி லத்துவித மோதுகின்ற வாதமது முண்மையல — வாதரவாய்த் தான்றேடுங் காலுந் தனையடைந்த காலத்துந் தான்றசம னன்றியார் தான். sādhakatti lēduvitañ sāddhiyatti ladduvita mōdugiṉḏṟa vādamadu muṇmaiyala — vādaravāyt tāṉḏṟēḍuṅ kālun taṉaiyaḍainda kālattun tāṉḏṟaśama ṉaṉḏṟiyār tāṉ. Verse 38 வினைமுதனா மாயின் விளைபயன் றுய்ப்போம் வினைமுதலா ரென்று வினவித் — தனையறியக் கர்த்தத் துவம்போய்க் கருமமூன் றுங்கழலு நித்தமா முத்தி நிலை. viṉaimudaṉā māyiṉ viḷaipayaṉ ḏṟuyppōm viṉaimudalā reṉḏṟu viṉavit — taṉaiyaṟiyak karttat tuvampōyk karumamūṉ ḏṟuṅkaṙalu nittamā mutti nilai. Verse 39 பத்தனா னென்னுமட்டே பந்தமுத்தி சிந்தனைகள் பத்தனா ரென்றுதன்னைப் பார்க்குங்காற் — சித்தமாய் நித்தமுத்தன் றானிற்க நிற்காதேற் பந்தசிந்தை முத்திசிந்தை முன்னிற்கு மோ. baddhaṉā ṉeṉṉumaṭṭē bandhamutti cintaṉaigaḷ baddhaṉā reṉḏṟutaṉṉaip pārkkuṅgāṯ — siddhamāy nittamuttaṉ ḏṟāṉiṟka niṟkādēṯ bandacintai mutticintai muṉṉiṟku mō. Verse 40 உருவ மருவ முருவருவ மூன்றா முறுமுத்தி யென்னி லுரைப்ப — னுருவ மருவ முருவருவ மாயு மகந்தை யுருவழிதன் முத்தி யுணர். uruva maruva muruvaruva mūṉḏṟā muṟumutti yeṉṉi luraippa — ṉuruva maruva muruvaruva māyu mahandai yuruvaṙitaṉ mutti yuṇar.