Ulladu Narpadu Anubandham by Ramana Maharshi File created and published by Realization.org Pāyiram verse 1 ஆன்றோர் மொழியி னனுவாதத் தாலுந்தன் பூன்றமொழி யாலும் பொலியுமீ — தேன்றபேர் சூத்திசுதா வாமுதத் தூமொழிநூல் சீரமணன் யாத்தருளித் தந்த தறி. āṉḏṟōr moṙiyi ṉaṉuvādat tāluntaṉ pūṉḏṟamoṙi yālum poliyumī — dēṉḏṟapēr sūttisudhā vāmudat tūmoṙinūl śīramaṇaṉ yāttaruḷit tanda daṟi. Pāyiram verse 2 தனவும் பிறமொழிக டந்தனவுங் கூட்டி யனுபந்த மாக வளித்த — பனுவலோ டுள்ளது நாற்பதை யோதி யுணர்ந்தொழுகுந் தெள்ளியோர் சேர்ந்தார் சிறப்பு. taṉavum piṟamoṙiga ṭandaṉavuṅ kūṭṭi yaṉubandha māha vaḷitta — paṉuvalō ḍuḷḷadu nāṟpadai yōdi yuṇarndoṙugun teḷḷiyōr cērntār ciṟappu. Maṅgalam எதன்கண்ணே நிலையாகி யிருந்திடுமிவ் வுலகமெலா மெதன தெல்லா மெதனின்றிவ் வனைத்துலகு மெழுமோமற் றிவையாவு மெதன்பொ ருட்டா மெதனாலிவ் வையமெலா மெழுந்திடுமிவ் வெல்லாமு மெதுவே யாகு மதுதானே யுளபொருளாஞ் சத்தியமா மச்சொருப மகத்தில் வைப்பாம் edaṉkaṇṇē nilaiyāhi yirundiḍumiv vulahamelā medaṉa dellā medaṉiṉḏṟiv vaṉaittulahu meṙumōmaṯ ṟivaiyāvu medaṉpo ruṭṭā medaṉāliv vaiyamelā meṙundiḍumiv vellāmu meduvē yāhu madudāṉē yuḷaporuḷāñ sattiyamā maccorupa mahattil vaippām. Verse 1 சத்திணக் கத்தினாற் சார்பகலுஞ் சார்பகலச் சித்தத்தின் சார்பு சிதையுமே — சித்தச்சார் பற்றா ரலைவிலதி லற்றார்சீ வன்முத்தி பெற்றா ரவரிணக்கம் பேண். sattiṇak kattiṉāṟ sārbahaluñ sārbahalac cittattiṉ sārbu sidaiyumē — cittaccār baṯṟā ralaiviladi laṯṟārjī vaṉmutti peṯṟā ravariṇakkam pēṇ. Verse 2 சாதுறவு சாரவுளஞ் சார்தெளிவி சாரத்தா லேதுபர மாம்பதமிங் கெய்துமோ — வோதுமது போதகனா னூற்பொருளாற் புண்ணியத்தாற் பின்னுமொரு சாதகத்தாற் சாரவொணா தால். sādhuṟavu sāravuḷañ cārteḷivi cārattā lēdupara māmpadamiṅ geydumō — vōdumadu bōdhakaṉā ṉūṯporuḷāṯ puṇṇiyattāṯ piṉṉumoru sādhakattāṯ sāravoṇā dāl. Verse 3 சாதுக்க ளாவார் சகவாச நண்ணினா லேதுக்கா மிந்நியம் மெல்லாமு — மேதக்க தண்டென்றன் மாருதத் தான்வீச வேவிசிறி கொண்டென்ன காரியநீ கூறு. sādhukka ḷāvār cakavāca naṇṇiṉā lēdukkā minniyam mellāmu — mēdakka taṇḍeṉḏṟaṉ mārutat tāṉvīsa vēvisiṟi koṇḍeṉṉa kāriyanī kūṟu. Verse 4 தாபந்தண் சந்திரனாற் றைனியநற் கற்பகத்தாற் பாபந்தான் கங்கையாற் பாறுமே — தாபமுத லிம்மூன்று மேகு மிணையில்லா சாதுக்க டம்மா தரிசனத்தாற் றான். tāpandaṇ candiraṉāṯ ṟaiṉiyanaṯ kaṯpakattāṯ pāpantāṉ gaṅgaiyāṯ pāṟumē — tāpamuda limmūṉḏṟu mēhu miṇaiyillā sādhukka ṭammā dariśaṉattāṯ ṟāṉ. Verse 5 கம்மயமாந் தீர்த்தங்கள் கன்மண்ணாந் தெய்வங்க ளம்மகத்துக் கட்கிணையே யாகாவா — மம்மவவை யெண்ணினா ளாற்றூய்மை யேய்விப்ப சாதுக்கள் கண்ணினாற் கண்டிடவே காண். kammayamān tīrtthaṅgaḷ kaṉmaṇṇān deyvaṅga ḷammahattuk kaṭkiṇaiyē yāhāvā — mammavavai yeṇṇiṉā ḷāṯṟūymai yēyvippa sādhukkaḷ kaṇṇiṉāṯ kaṇḍiḍavē kāṇ. Verse 6 தேவனா ரார்மனந் தேருவ னென்மன மாவியா மென்னா லறிபடுமே — தேவனீ யாகுமே யாகையா லார்க்குஞ் சுருதியா லேகனாந் தேவனே யென்று. dēvaṉā rārmaṉan tēruva ṉeṉmaṉa māviyā meṉṉā laṟibaḍumē — dēvaṉī yāhumē yāhaiyā lārkkuñ śurutiyā lēkaṉān dēvaṉē yeṉḏṟu. Verse 7 ஒளியுனக் கெதுபக லினனெனக் கிருள்விளக் கொளியுண ரொளியெது கணதுண ரொளியெது வொளிமதி மதியுண ரொளியெது வதுவக மொளிதனி லொளியுநீ யெனகுரு வகமதே. oḷiyuṉak kedupaha liṉaṉeṉak kiruḷviḷak koḷiyuṇa roḷiyedu kaṇaduṇa roḷiyedu voḷimati matiyuṇa roḷiyedu vaduvaha moḷitaṉi loḷiyunī yeṉaguru vahamadē. Verse 8 இதயமாங் குகையி னாப்ப ணேகமாம் பிரம்ம மாத்ர மதுவக மகமா நேரே யவிர்ந்திடு மான்மா வாக விதயமே சார்வாய் தன்னை யெண்ணியா ழலது வாயு வதனுட னாழ்ம னத்தா லான்மாவி னிட்ட னாவாய். idayamāṅ guhaiyi ṉāppa ṇēkamām biramma mātra maduvaha mahamā nērē yavirndiḍu māṉmā vāha vidayamē sārvāy taṉṉai yeṇṇiyā ṙaladu vāyu vadaṉuḍa ṉāṙma ṉattā lāṉmāvi ṉiṭṭa ṉāvāy. Verse 9 அகக்கம லத்தே யமல வசல வகமுருவ மாகு மறிவே — தகத்தை யகற்றிடுவ தாலவ் வகமா மறிவே யகவீ டளிப்ப தறி. ahakkama lattē yamala vacala vahamuruva māhu maṟivē — dahattai yahaṯṟiḍuva dālav vahamā maṟivē yahavī ḍaḷippa daṟi. Verse 10 தேகங் கடநிகர் சடமிதற் ககமெனுந் திகழ்விலதா னாகஞ் சடலமி றுயிலினி றினமுறு நமதியலாற் கோகங் கரனெவ ணுளனுணர்ந் துளருளக் குகையுள்ளே சோகம் புரணவ ருணகிரி சிவவிபு சுயமொளிர்வான். dēhaṅ ghaṭanihar jaḍamidaṟ kahameṉun tihaṙviladā ṉāhañ jaḍalami ṟuyiliṉi ṟiṉamuṟu namadiyalāṟ kōhaṅ karaṉeva ṇuḷaṉuṇarn duḷaruḷak guhaiyuḷḷē sōham phuraṇava ruṇagiri śivavibhu suyamoḷirvāṉ. Verse 11 பிறந்த தெவன்றன் பிரம்மமூ லத்தே பிறந்ததெவ ணானென்று பேணிப் — பிறந்தா னவனே பிறந்தா னவனிதமு னீச னவனவன வன்றினமு நாடு. piṟanda devaṉḏṟaṉ birammamū lattē piṟandadeva ṇāṉeṉḏṟu pēṇip — piṟandā ṉavaṉē piṟandā ṉavaṉitamu ṉīśa ṉavaṉavaṉa vaṉḏṟiṉamu nāḍu. Verse 12 இழிவுடல்யா னென்ன லிகந்திடுக வென்று மொழிவிலின் பாந்தன்னை யோர்க — வழியு முடலோம்ப லோடுதனை யோரவுனல் யாறு கடக்கக் கராப்புணைகொண் டற்று. iṙivuḍalyā ṉeṉṉa lihandiḍuga veṉḏṟu moṙiviliṉ bāndaṉṉai yōrga — vaṙiyu muḍalōmba lōḍudaṉai yōravuṉal yāṟu kaḍakkak karāppuṇaigoṇ ḍaṯṟu. Verse 13 தானந் தவம்வேள்வி தன்மம்யோ கம்பத்தி வானம் பொருள்சாந்தி வாய்மையருள் — மோனநிலை சாகாமற் சாவறிவு சார்துறவு வீடின்பந் தேகான்ம பாவமற றேர். dāṉan tavamvēḷvi dhaṉmamyō gambhatti vāṉam poruḷśānti vāymaiyaruḷ — mōṉanilai sāhāmaṟ sāvaṟivu sārtuṟavu vīḍiṉban dēhāṉma bhāvamaṟa ṟēr. Verse 14 வினையும் விபத்தி வியோகமஞ் ஞான மினையவையார்க் கென்றாய்ந் திடலே — வினைபத்தி யோகமுணர் வாய்ந்திடநா னின்றியவை யென்றுமிறா னாகமன லேயுண்மை யாம். viṉaiyum vibhatti viyōgamañ ñāṉa miṉaiyavaiyārk keṉḏṟāyn diḍalē — viṉaibhatti yōgamuṇar vāyndiḍanā ṉiṉḏṟiyavai yeṉḏṟumiṟā ṉāhamaṉa lēyuṇmai yām. Verse 15 சத்தியினாற் றாமியங்குந் தன்மையுண ராதகில சித்திகணாஞ் சேர்வமெனச் சேட்டிக்கும் — பித்தர்கூத் தென்னை யெழுப்பிவிடி னெம்மட்டித் தெவ்வரெனச் சொன்னமுட வன்கதையின் சோடு. śattiyiṉāṯ ṟāmiyaṅgun taṉmaiyuṇa rādakhila siddhigaṇāñ cērvameṉac cēṭṭikkum — pittarkūt teṉṉai yeṙuppiviḍi ṉemmaṭṭit tevvareṉac coṉṉamuḍa vaṉkathaiyiṉ jōḍu. Verse 16 சித்தத்தின் சாந்தியதே சித்தமா முத்தியெனிற் சித்தத்தின் செய்கையின்றிச் சித்தியாச் — சித்திகளிற் சித்தஞ்சேர் வாரெங்ஙன் சித்தக் கலக்கந்தீர் முத்திசுகந் தோய்வார் மொழி. cittattiṉ śāntiyadē siddhamā muttiyeṉiṟ cittattiṉ seygaiyiṉḏṟic siddhiyāc — siddhigaḷiṟ cittañcēr vāreṅṅaṉ cittak kalakkantīr muttisukhan tōyvār moṙi. Verse 17 பூபரந் தாங்கவிறை போலியுயிர் தாங்கலது கோபுரந் தாங்கியுருக் கோரணிகாண் — மாபரங்கொள் வண்டிசெலு வான்சுமையை வண்டிவை யாதுதலை கொண்டுநலி கொண்டதெவர் கோது. bhūbharan dāṅgaviṟai pōliyuyir tāṅgaladu gōpuran tāṅgiyuruk ghōraṇikāṇ — mābharaṅgoḷ vaṇḍiselu vāṉcumaiyai vaṇḍivai yādutalai koṇḍunali koṇḍadevar kōdu. Verse 18 இருமுலை நடுமார் படிவயி றிதன்மே லிருமுப் பொருளுள நிறம்பல விவற்று ளொருபொரு ளாம்பல ரும்பென வுள்ளே யிருவிரல் வலத்தே யிருப்பது மிதயம். Irumulai naḍumār baḍivayi ṟidaṉmē lirumup poruḷuḷa niṟambala vivaṯṟu ḷoruporu ḷāmbala rumbeṉa vuḷḷē yiruviral valattē yiruppadu midayam. Verse 19 அதன்முக மிகலுள தகமுள சிறுதுளை யதனிலா சாதியொ டமர்ந்துள திருந்தம மதனையா சிரித்துள வகிலமா நாடிக ளதுவளி மனதொளி யவற்றின திருப்பிடம். adaṉmuka mihaluḷa dahamuḷa siṟuduḷai yadaṉilā śādiyo ḍamarnduḷa dirundama madaṉaiyā śirittuḷa vakhilamā nāḍiga ḷaduvaḷi maṉadoḷi yavaṯṟiṉa diruppiḍam. Verse 20 இதயமலர்க் குகையகமா யிலகிறையே குகேசனென வேத்தப் பட்டோ னிதமனைய குகேசன்யா னெனுஞ்சோகம் பாவனைதா னின்னு டம்பிற் றிதமுறுநா னெனுந்திடம்போ லப்பியாச பலத்தாலத் தேவாய் நிற்கிற் சிதையுடனா னெனுமவித்தை செங்கதிரோ னெதிரிருள்போற் சிதையு மன்றே. idayamalark kuhaiyahamā yilahiṟaiyē guhēśaṉeṉa vēttap paṭṭō ṉitamaṉaiya guhēśaṉyā ṉeṉuñcōham bhāvaṉaitā ṉiṉṉu ḍambiṯ ṟitamuṟunā ṉeṉundiḍhambō labbhiyāsa balattālat tēvāy niṯkiṯ cidaiyuḍaṉā ṉeṉumaviddai seṅgadirō ṉediriruḷpōṯ cidaiyu maṉḏṟē. Verse 21 எப்பெருங்கண் ணாடியின்கண் ணிவையாவு நிழலாக வெதிரே தோன்று மிப்பிரபஞ் சத்துயிர்கட் கெல்லாமவ் விதயமென விசைப்ப தேதோ செப்புதியென் றேவினவு மிராமனுக்கு வசிட்டமுனி செப்பு கின்றா னிப்புவியி னுயிர்க்கெல்லா மிதயமிரு விதமாகு மெண்ணுங் காலே. epperuṅgaṇ ṇāḍiyiṉgaṇ ṇivaiyāvu niṙalāha vedirē tōṉḏṟu mippirapañ cattuyirkaṭ kellāmav vidayameṉa visaippa dēdō ceppudiyeṉ ḏṟēviṉavu mirāmaṉukku vasiṭṭamuṉi ceppu giṉḏṟā ṉibbhuviyi ṉuyirkkellā midayamiru vidhamāhu meṇṇuṅ gālē. Verse 22 கொளத்தக்க துந்தள்ளத் தக்கதுமா மிவ்விரண்டின் கூறு கேளா யளத்தற்கா முடம்பின்மார் பகத்தொரிடத் திதயமென வமைந்த வங்கந் தளத்தக்க தோரறிவா காரவித யங்கொள்ளத் தக்க தாமென் றுளத்துட்கொள் ளஃதுள்ளும் புறமுமுள துள்வெளியி லுள்ள தன்றாம். koḷattakka dundaḷḷat takkadumā mivviraṇḍiṉ kūṟu kēḷā yaḷattaṯkā muḍambiṉmār bahattoriḍat tidayameṉa vamainda vaṅgan taḷattakka dōraṟivā kāravida yaṅgoḷḷat takka dāmeṉ ṟuḷattuṭkoḷ ḷaḵduḷḷum buṟamumuḷa duḷveḷiyi luḷḷa daṉḏṟām. Verse 23 அதுவேமுக் கியவிதய மதன்கண்ணிவ் வகிலமுமே யமர்ந்தி ருக்கு மதுவாடி யெப்பொருட்கு மெல்லாச்செல் வங்கட்கு மதுவே யில்ல மதனாலே யனைத்துயிர்க்கு மறிவதுவே யிதயமென வறைய லாகுஞ் சிதையாநிற் குங்கற்போற் சடவுடலி னவயவத்தோர் சிறுகூ றன்றால். aduvēmuk khiyavidaya madaṉgaṇṇiv vakhilamumē yamarndi rukku maduvāḍi yepporuṭku mellāccel vaṅgaṭku maduvē yilla madaṉālē yaṉaittuyirkku maṟivaduvē yidayameṉa vaṟaiya lāhuñ cidaiyāniṯ kuṅgaṯpōṯ jaḍavuḍali ṉavayavattōr siṟukū ṟaṉḏṟāl. Verse 24 ஆதலினா லறிவுமய மாஞ்சுத்த விதயத்தே யகத்தைச் சேர்க்குஞ் சாதனையால் வாதனைக ளொடுவாயு வொடுக்கமுமே சாருந் தானே. ādaliṉā laṟivumaya māñśuddha vidayattē yahattaic cērkkuñ sādhaṉaiyāl vādaṉaiga ḷoḍuvāyu voḍukkamumē sārun tāṉē. Verse 25 அகில வுபாதி யகன்ற வறிவே தகமச் சிவமென் றனிச — மகத்தே யகலாத் தியான மதனா லகத்தி னகிலவா சத்தி யகற்று. akhila vupādhi yahaṉḏṟa vaṟivē dahamac śivameṉ ḏṟaṉiśa — mahattē yahalāt dhiyāṉa madaṉā lahatti ṉakhilavā catti yahaṯṟu. Verse 26 விதவிதமா நிலைகளெலாம் விசாரஞ் செய்து மிச்சையறு பரமபதம் யாதொன் றுண்டோ வதனையே திடமாக வகத்தாற் பற்றி யனவரத முலகில்விளை யாடு வீரா வெதுசகல விதமான தோற்றங் கட்கு மெதார்த்தமதா யகத்துளதோ வதைய றிந்தா யதனாலப் பார்வையினை யகலா தென்று மாசைபோ லுலகில்விளை யாடு வீரா. vidhavidhamā nilaigaḷelām vicārañ ceydu miccaiyaṟu paramapadam yādoṉ ḏṟuṇḍō vadaṉaiyē diḍhamāha vahattāṯ paṯṟi yaṉavarata mulahilviḷai yāḍu vīrā vedusakala vidhamāṉa tōṯṟaṅ gaṭku methārtthamadā yahattuḷadō vadaiya ṟindā yadaṉālap pārvaiyiṉai yahalā deṉḏṟu māśaipō lulahilviḷai yāḍu vīrā. Verse 27 போலிமன வெழுச்சிமகிழ் வுற்றோ னாகிப் போலிமனப் பதைப்புவெறுப் புற்றோ னாகிப் போலிமுயல் வாந்தொடக்க முற்றோ னாகிப் புரையிலனா யுலகில்விளை யாடு வீரா மாலெனும்பல் கட்டுவிடு பட்டோ னாகி மன்னுசம னாகியெல்லா நிலைமைக் கண்ணும் வேலைகள்வே டத்தியைவ வெளியிற் செய்து வேண்டியவா றுலகில்விளை யாடு வீரா. pōlimaṉa veṙuccimahiṙ vuṯṟō ṉāhip pōlimaṉap padaippuveṟup puṯṟō ṉāhip pōlimuyal vāndoḍakka muṯṟō ṉāhip puraiyilaṉā yulahilviḷai yāḍu vīrā māleṉumbal kaṭṭuviḍu paṭṭō ṉāhi maṉṉusama ṉāhiyellā nilaimaik kaṇṇum vēlaigaḷvē ḍattiyaiva veḷiyiṯ ceydu vēṇḍiyavā ṟulahilviḷai yāḍu vīrā. Verse 28 அறிவுண்மை நிட்டனா மான்மவித் தாவா னறிவாற் புலன்செற்றா னார்தா — னறிவங்கி யாவனறி வாங்குலிசத் தான்கால காலனவன் சாவினைமாய் வீரனெனச் சாற்று. aṟivuṇmai niṭṭaṉā māṉmavit tāvā ṉaṟivāṟ pulaṉceṯṟā ṉārtā — ṉaṟivaṅgi yāvaṉaṟi vāṅkuliśat tāṉkāla kālaṉavaṉ cāviṉaimāy vīraṉeṉac cāṯṟu. Verse 29 தத்துவங் கண்டவற்குத் தாமே வளருமொளி புத்திவலு வும்வசந்தம் போந்ததுமே — யித்தரையிற் றாருவழ காதி சகல குணங்களுஞ் சேர விளங்கலெனத் தேர். tattuvaṅ gaṇḍavaṯkut tāmē vaḷarumoḷi buddhivalu vumvasantam pōndadumē — yittaraiyiṯ ṟāruvaṙa hādi sakala guṇaṅgaḷuñ cēra viḷaṅgaleṉat tēr. Verse 30 சேய்மையுளஞ் சென்றுகதை கேட்பார்போல் வாதனைக டேய்மனஞ்செய் துஞ்செய்யா தேயவைக — டோய்மனஞ்செய் தின்றேனுஞ் செய்ததே யிங்கசைவற் றுங்கனவிற் குன்றேறி வீழ்வார் குழி. sēymaiyuḷañ ceṉḏṟukadai kēṭpārpōl vādaṉaiga ṭēymaṉañcey duñceyyā dēyavaiga — ṭōymaṉañcey diṉḏṟēṉuñ ceydadē yiṅgasaivaṯ ṟuṅgaṉaviṯ kuṉḏṟēṟi vīṙvār kuṙi. Verse 31 வண்டிதுயில் வானுக்கவ் வண்டிசெல னிற்றிலொடு வண்டிதனி யுற்றிடுதன் மானுமே — வண்டியா மூனவுட லுள்ளே யுறங்குமெய்ஞ் ஞானிக்கு மானதொழி னிட்டையுறக் கம். vaṇḍiduyil vāṉukkav vaṇḍisela ṉiṯṟiloḍu vaṇḍidaṉi yuṯṟiḍudaṉ māṉumē — vaṇḍiyā mūṉavuḍa luḷḷē yuṟaṅgumeyñ ñāṉikku māṉadoṙi ṉiṭṭhaiyuṟak kam. Verse 32 நனவு கனவுதுயி னாடுவார்க் கப்பா னனவு துயிற்றுரிய நாமத் — தெனுமத் துரிய மதேயுளதாற் றோன்றுமூன் றின்றாற் றுரிய வதீதந் துணி. naṉavu kaṉavuduyi ṉāḍuvārk kappā ṉaṉavu tuyiṯṟuriya nāmat — teṉumat turiya madēyuḷadāṯ ṟōṉḏṟumūṉ ḏṟiṉḏṟāṟ ṟuriya vatītan tuṇi. Verse 33 சஞ்சிதவா காமியங்கள் சாராவா ஞானிக்கூழ் விஞ்சுமெனல் வேற்றார்கேள் விக்குவிளம் — புஞ்சொல்லாம் பர்த்தாபோய்க் கைம்மையுறாப் பத்தினியெஞ் சாததுபோற் கர்த்தாபோ மூவினையுங் காண். sañcitavā gāmiyaṅgaḷ sārāvā ñāṉikkūṙ viñcumeṉal vēṯṟārkēḷ vikkuviḷam — buñcollām bharttāpōyk kaimmaiyuṟāp pattiṉiyeñ jādadupōṟ karttāpō mūviṉaiyuṅ gāṇ. Verse 34 மக்கண் மனைவிமுதன் மற்றவர்க ளற்பமதி மக்கட் கொருகுடும்ப மானவே — மிக்ககல்வி யுள்ளவர்த முள்ளத்தே யொன்றலபன் னூற்குடும்ப முள்ளதுயோ கத்தடையா யோர். makkaṇ maṉaivimudaṉ maṯṟavarga ḷaṯpamati makkaṭ korukuṭumba māṉavē — mikkakalvi yuḷḷavarta muḷḷattē yoṉḏṟalapaṉ ṉūṟkuṭumba muḷḷaduyō gattaḍaiyā yōr. Verse 35 எழுத்தறிந்த தாம்பிறந்த தெங்கேயென் றெண்ணி யெழுத்தைத் தொலைக்க வெணாதோ — ரெழுத்தறிந்தென் சத்தங்கொ ளெந்திரத்தின் சால்புற்றார் சோணகிரி வித்தகனே வேறார் விளம்பு. eṙuttaṟinda tāmpiṟanda deṅgēyeṉ ḏṟeṇṇi yeṙuttait tolaikka veṇādō — reṙuttaṟindeṉ sattaṅgo ḷentirattiṉ sālbuṯṟār śōṇagiri vittakaṉē vēṟār viḷambu. Verse 36 கற்று மடங்காரிற் கல்லாதா ரேயுய்ந்தார் பற்று மதப்பேயின் பாலுய்ந்தார் — சுற்றுபல சிந்தைவாய் நோயுய்ந்தார் சீர்தேடி யோடலுய்ந்தா ருய்ந்ததொன் றன்றென் றுணர். kaṯṟu maḍaṅgāriṟ kallādā rēyuyndār paṯṟu madappēyiṉ bāluyndār — suṯṟupala cintaivāy nōyuyndār sīrtēḍi yōḍaluyndā ruyndadoṉ ḏṟaṉḏṟeṉ ḏṟuṇar. Verse 37 எல்லா வுலகுந் துரும்பா யினுமறைக ளெல்லாமே கைக்கு ளிருந்தாலும் — பொல்லாப் புகழ்ச்சியாம் வேசிவசம் புக்கா ரடிமை யகலவிட லம்மா வரிது. ellā vulahun turumbā yiṉumaṟaiga ḷellāmē kaikku ḷirundālum — pollāp puhaṙcciyām vēśivaśam pukkā raḍimai yahalaviḍa lammā varidu. Verse 38 தானன்றி யாருண்டு தன்னையா ரென்சொலினென் றான்றன்னை வாழ்த்துகினுந் தாழ்த்துகினுந் — தானென்ன தான்பிறரென் றோராமற் றன்னிலையிற் பேராமற் றானென்று நின்றிடவே தான். tāṉaṉḏṟi yāruṇḍu taṉṉaiyā reṉcoliṉeṉ ḏṟāṉḏṟaṉṉai vāṙttugiṉun tāṙttugiṉun — tāṉeṉṉa tāṉbiṟareṉ ḏṟōrāmaṯ ṟaṉṉilaiyiṯ pērāmaṯ ṟāṉeṉḏṟu niṉḏṟiḍavē tāṉ. Verse 39 அத்துவித மென்று மகத்துறுக வோர்போது மத்துவிதஞ் செய்கையி லாற்றற்க — புத்திரனே யத்துவித மூவுலகத் தாகுங் குருவினோ டத்துவித மாகா தறி. attuvita meṉḏṟu mahattuṟuha vōrpōdu mattuvitañ ceygaiyi lāṯṟaṯga — puttiraṉē yattuvita mūvulahat tāhuṅ guruviṉō ḍattuvita māhā daṟi. Verse 40 அகிலவே தாந்தசித் தாந்தசா ரத்தை யகமுண்மை யாக வறைவ — னகஞ்செத் தகமது வாகி லறிவுரு வாமவ் வகமதே மிச்ச மறி. akhilavē dāntasid dhāntasā rattai yahamuṇmai yāha vaṟaiva — ṉahañcet tahamadu vāhi laṟivuru vāmav vahamadē micca maṟi.