Sri Arunacala Astakam by Ramana Maharshi Verse 1 அறிவறு கிரியென வமர்தரு மம்மா வதிசய மிதன்செய லறிவரி தார்க்கு மறிவறு சிறுவய ததுமுத லருணா சலமிகப் பெரிதென வறிவினி லங்க வறிகில னதன்பொரு ளதுதிரு வண்ணா மலையென வொருவரா லறிவுறப் பெற்று மறிவினை மருளுறுத் தருகினி லீர்க்க வருகுறு மமயமி தசலமாக் கண்டேன். aṟivaṟu giriyeṉa vamardaru mammā vatiśaya midaṉceya laṟivari dārkku maṟivaṟu siṟuvaya dadumuda laruṇā calamihap perideṉa vaṟiviṉi laṅga vaṟihila ṉadaṉporu ḷadutiru vaṇṇā malaiyeṉa voruvarā laṟivuṟap peṯṟu maṟiviṉai maruḷuṟut taruhiṉi līrkka varuhuṟu mamayami dacalamāk kaṇḍēṉ. Verse 2 கண்டவ னெவனெனக் கருத்தினு ணாடக் கண்டவ னின்றிட நின்றது கண்டேன் கண்டன னென்றிடக் கருத்தெழ வில்லை கண்டில னென்றிடக் கருத்தெழு மாறென் விண்டிது விளக்கிடு விறலுறு வோனார் விண்டிலை பண்டுநீ விளக்கினை யென்றால் விண்டிடா துன்னிலை விளக்கிட வென்றே விண்டல மசலமா விளங்கிட நின்றாய். kaṇḍava ṉevaṉeṉak karuttiṉu ṇāḍak kaṇḍava ṉiṉḏṟiḍa niṉḏṟadu kaṇḍēṉ kaṇḍaṉa ṉeṉḏṟiḍak karutteṙa villai kaṇḍila ṉeṉḏṟiḍak karutteṙu māṟeṉ viṇḍidu viḷakkiḍu viṟaluṟu vōṉār viṇḍilai paṇḍunī viḷakkiṉai yeṉḏṟāl viṇḍiṭā duṉṉilai viḷakkiḍa veṉḏṟē viṇḍala macalamā viḷaṅgiḍa niṉḏṟāy. Verse 3 நின்னையா னுருவென வெண்ணியே நண்ண நிலமிசை மலையெனு நிலையினை நீதா னுன்னுரு வருவென வுன்னிடின் விண்ணோக் குறவுல கலைதரு மொருவனை யொக்கு முன்னுரு வுனலற வுன்னிட முந்நீ ருறுசருக் கரையுரு வெனவுரு வோயு மென்னையா னறிவுற வென்னுரு வேறே திருந்தனை யருணவான் கிரியென விருந்தோய். niṉṉaiyā ṉuruveṉa veṇṇiyē naṇṇa nilamisai malaiyeṉu nilaiyiṉai nīdā ṉuṉṉuru varuveṉa vuṉṉiḍiṉ viṇṇōk kuṟavula halaidaru moruvaṉai yokku muṉṉuru vuṉalaṟa vuṉṉiḍa munnī ruṟusaruk karaiyuru veṉavuru vōyu meṉṉaiyā ṉaṟivuṟa veṉṉuru vēṟē dirundaṉai yaruṇavāṉ giriyeṉa virundōy. Verse 4 இருந்தொளி ருனைவிடுத் தடுத்திட றெய்வ மிருட்டினை விளக்கெடுத் தடுத்திட லேகா ணிருந்தொளி ருனையறி வுறுத்திடற் கென்றே யிருந்தனை மதந்தொறும் விதவித வுருவா யிருந்தொளி ருனையறி கிலரெனி லன்னோ ரிரவியி னறிவறு குருடரே யாவா ரிருந்தொளி ரிரண்டற வெனதுளத் தொன்றா யிணையறு மருணமா மலையெனு மணியே. irundoḷi ruṉaiviḍut taḍuttiḍa ṟeyva miruṭṭiṉai viḷakkeḍut taḍuttiḍa lēkā ṇirundoḷi ruṉaiyaṟi vuṟuttiḍaṯ keṉḏṟē yirundaṉai madandoṟum vidhavidha vuruvā yirundoḷi ruṉaiyaṟi hilareṉi laṉṉō riraviyi ṉaṟivaṟu kuruḍarē yāvā rirundoḷi riraṇḍaṟa veṉaduḷat toṉḏṟā yiṇaiyaṟu maruṇamā malaiyeṉu maṇiyē. Verse 5 மணிகளிற் சரடென வுயிர்தொறு நானா மதந்தொறு மொருவனா மருவினை நீதான் மணிகடைந் தெனமன மனமெனுங் கல்லின் மறுவறக் கடையநின் னருளொளி மேவும் மணியொளி யெனப்பிறி தொருபொருட் பற்று மருவுற லிலைநிழற் படிதகட் டின்விண் மணியொளி படநிழல் பதியுமோ வுன்னின் மறுபொரு ளருணநல் லொளிமலை யுண்டோ. maṇigaḷiṯ caraḍeṉa vuyirdoṟu nāṉā matandoṟu moruvaṉā maruviṉai nīdāṉ maṇigaḍain deṉamaṉa maṉameṉuṅ galliṉ maṟuvaṟak kaḍaiyaniṉ ṉaruḷoḷi mēvum maṇiyoḷi yeṉappiṟi doruporuṭ paṯṟu maruvuṟa lilainiṙaṟ paḍidagaṭ ṭiṉviṇ maṇiyoḷi paḍaniṙal padiyumō vuṉṉiṉ maṟuporu ḷaruṇanal loḷimalai yuṇḍō. Verse 6 உண்டொரு பொருளறி வொளியுள மேநீ யுளதுனி லலதிலா வதிசய சத்தி நின்றணு நிழனிரை நினைவறி வோடே நிகழ்வினைச் சுழலிலந் நினைவொளி யாடி கண்டன நிழற்சக விசித்திர முள்ளுங் கண்முதற் பொறிவழி புறத்துமொர் சில்லா னின்றிடு நிழல்பட நிகரருட் குன்றே நின்றிட சென்றிட நினைவிட வின்றே. uṇḍoru poruḷaṟi voḷiyuḷa mēnī yuḷaduṉi laladilā vatiśaya śatti niṉḏṟaṇu niṙaṉirai niṉaivaṟi vōḍē nikaṙviṉaic cuṙalilan niṉaivoḷi yāḍi kaṇḍaṉa niṙaṯcaga vicittira muḷḷuṅ kaṇmudaṯ poṟivaṙi puṟattumor sillā ṉiṉḏṟiḍu niṙalpaḍa nihararuṭ kuṉḏṟē niṉḏṟiḍa ceṉḏṟiḍa niṉaiviḍa viṉḏṟē. Verse 7 இன்றக மெனுநினை வெனிற்பிற வொன்று மின்றது வரைபிற நினைவெழி லார்க்கெற் கொன்றக முதிதல மெதுவென வுள்ளாழ்ந் துளத்தவி சுறினொரு குடைநிழற் கோவே யின்றகம் புறமிரு வினையிறல் சன்ம மின்புதுன் பிருளொளி யெனுங்கன விதய மன்றக மசலமா நடமிடு மருண மலையெனு மெலையறு மருளொளிக் கடலே. iṉḏṟaha meṉuniṉai veṉiṟpiṟa voṉḏṟu miṉḏṟadu varaipiṟa niṉaiveṙi lārkkeṟ koṉḏṟaha mudithala meduveṉa vuḷḷāṙn duḷattavi cuṟiṉoru kuḍainiḻaṟ kōvē yiṉḏṟaham puṟamiru viṉaiyiṟal jaṉma miṉbutuṉ biruḷoḷi yeṉuṅkaṉa vidaya maṉḏṟaha macalamā naḍamiṭu maruṇa malaiyeṉu melaiyaṟu maruḷoḷik kaḍalē. Verse 8 கடலெழு மெழிலியாற் பொழிதரு நீர்தான் கடனிலை யடைவரை தடைசெயி னில்லா துடலுயி ருனிலெழு முனையுறு வரையி லுறுபல வழிகளி லுழலினு நில்லா திடவெளி யலையினு நிலையிலை புள்ளுக் கிடநில மலதிலை வருவழி செல்லக் கடனுயிர் வருவழி சென்றிட வின்பக் கடலுனை மருவிடு மருணபூ தரனே. kaḍaleṙu meṙiliyāṯ poṙidaru nīrdāṉ kaḍaṉilai yaḍaivarai taḍaiceyi ṉillā duḍaluyi ruṉileṙu muṉaiyuṟu varaiyi luṟupala vaṙigaḷi luṙaliṉu nillā diḍaveḷi yalaiyiṉu nilaiyilai puḷḷuk kiḍanila maladilai varuvaṙi sellak kaḍaṉuyir varuvaṙi seṉḏṟiḍa viṉpak kaḍaluṉai maruviḍu maruṇabhū dharaṉē.