Srī Aruṇācala Akṣaramaṇamālai by Ramana Maharshi ஸ்ரீ அருணாசல அக்ஷரமணமாலை ஸ்ரீ ரமண மகரிஷி srī aruṇācala akṣaramaṇamālai srī ramaṇa makariṣi பாயிரம் pāyiram தருணா ருணமணி கிரணா வலிநிகர் தரும க்ஷரமண மகிழ்மாலை தெருணா டியதிரு வடியார் தெருமரல் தெளியப் பரவுதல் பொருளாகக் கருணா கரமுனி ரமணா ரியனுவ கையினாற் சொலியது கதியாக வருணா சலமென வகமே யறிவொடு மாழ்வார் சிவனுல காள்வாரே. taruṇā ruṇamaṇi kiraṇā valinikar taruma kṣaramaṇa makiḻmālai teruṇā ṭiyatiru vaṭiyār terumaral teḷiyap paravutal poruḷākak karuṇā karamuṉi ramaṇā riyaṉuva kaiyiṉāṟ coliyatu katiyāka varuṇā calameṉa vakamē yaṟivoṭu māḻvār civaṉula kāḷvārē. காப்பு kāppu அருணாசல வரற்கேற்ற வக்ஷரமண மாலைசாற்றக் கருணாகர கணபதியே கரமருளிக் காப்பாயே. aruṇācala varaṟkēṟṟa vakṣaramaṇa mālaicāṟṟak karuṇākara kaṇapatiyē karamaruḷik kāppāyē. நூல் nūl அருணா சலசிவ அருணா சலசிவ அருணா சலசிவ அருணாசலா! அருணா சலசிவ அருணா சலசிவ அருணா சலசிவ அருணாசலா! aruṇā calaciva aruṇā calaciva aruṇā calaciva aruṇācalā! aruṇā calaciva aruṇā calaciva aruṇā calaciva aruṇācalā! 1. அருணா சலமென வகமே நினைப்பவ ரகத்தைவே ரறுப்பா யருணாசலா 1. aruṇā calameṉa vakamē niṉaippava rakattaivē raṟuppā yaruṇācalā 2. அழகுசுந் தரம்போ லகமும் நீயுமுற் றபின்னமா யிருப்போ மருணாசலா 2. aḻakucun tarampō lakamum nīyumuṟ ṟapiṉṉamā yiruppō maruṇācalā 3. அகம்புகுந் தீர்த்துன் னககுகை சிறையா யமர்வித்த தென்கொ லருணாசலா 3. akampukun tīrttuṉ ṉakakukai ciṟaiyā yamarvitta teṉko laruṇācalā 4. ஆருக் காவெனை யாண்டனை யகற்றிடி லகிலம் பழித்திடு மருணாசலா 4. āruk kāveṉai yāṇṭaṉai yakaṟṟiṭi lakilam paḻittiṭu maruṇācalā 5. இப்பழி தப்புனை யேனினைப் பித்தா யினியார் விடுவா ரருணாசலா 5. ippaḻi tappuṉai yēṉiṉaip pittā yiṉiyār viṭuvā raruṇācalā 6. ஈன்றிடு மன்னையிற் பெரிதருள் புரிவோ யிதுவோ வுனதரு ளருணாசலா 6. īṉṟiṭu maṉṉaiyiṟ peritaruḷ purivō yituvō vuṉataru ḷaruṇācalā 7. உனையே மாற்றி யோடா துளத்தின்மே லுறுதியா யிருப்பா யருணாசலா 7. uṉaiyē māṟṟi yōṭā tuḷattiṉmē luṟutiyā yiruppā yaruṇācalā 8. ஊர்சுற் றுளம்விடா துனைக்கண் டடங்கிட வுன்னழ கைக்காட் டருணாசலா 8. ūrcuṟ ṟuḷamviṭā tuṉaikkaṇ ṭaṭaṅkiṭa vuṉṉaḻa kaikkāṭ ṭaruṇācalā 9. எனையழித் திப்போ தெனைக்கல வாவிடி லிதுவோ வாண்மை யருணாசலா 9. eṉaiyaḻit tippō teṉaikkala vāviṭi lituvō vāṇmai yaruṇācalā 10. ஏனிந்த வுறக்க மெனைப்பிற ரிழுக்க விதுவுனக் கழகோ வருணாசலா 10. ēṉinta vuṟakka meṉaippiṟa riḻukka vituvuṉak kaḻakō varuṇācalā 11. ஐம்புலக் கள்வ ரகத்தினிற் புகும்போ தகத்தினீ யிலையோ வருணாசலா 11. aimpulak kaḷva rakattiṉiṟ pukumpō takattiṉī yilaiyō varuṇācalā 12. ஒருவனா முன்னை யொளித்தெவர் வருவா ருன்சூ தேயிது வருணாசலா 12. oruvaṉā muṉṉai yoḷittevar varuvā ruṉcū tēyitu varuṇācalā 13. ஓங்கா ரப்பொரு ளொப்புயர் வில்லோ யுனையா ரறிவா ரருணாசலா 13. ōṅkā rapporu ḷoppuyar villō yuṉaiyā raṟivā raruṇācalā 14. ஔவைபோ லெனக்குன் னருளைத் தந்தெனை யாளுவ துன்கட னருணாசலா 14. auvaipō leṉakkuṉ ṉaruḷait tanteṉai yāḷuva tuṉkaṭa ṉaruṇācalā 15. கண்ணுக்குக் கண்ணாய்க் கண்ணின்றிக் காணுனைக் காணுவ தெவர்பா ரருணாசலா 15. kaṇṇukkuk kaṇṇāyk kaṇṇiṉṟik kāṇuṉaik kāṇuva tevarpā raruṇācalā 16. காந்த மிரும்புபோற் கவர்ந்தெனை விடாமற் கலந்தெனோ டிருப்பா யருணாசலா 16. kānta mirumpupōṟ kavarnteṉai viṭāmaṟ kalanteṉō ṭiruppā yaruṇācalā 17. கிரியுரு வாகிய கிருபைக் கடலே கிருபைகூர்ந் தருளுவா யருணாசலா 17. kiriyuru vākiya kirupaik kaṭalē kirupaikūrn taruḷuvā yaruṇācalā 18. கீழ்மே லெங்குங் கிளரொளி மணியென் கீழ்மையைப் பாழ்செய் யருணாசலா 18. kīḻmē leṅkuṅ kiḷaroḷi maṇiyeṉ kīḻmaiyaip pāḻcey yaruṇācalā 19. குற்றமுற் றறுத்தெனைக் குணமாய்ப் பணித்தாள் குருவுரு வாயொளி ரருணாசலா 19. kuṟṟamuṟ ṟaṟutteṉaik kuṇamāyp paṇittāḷ kuruvuru vāyoḷi raruṇācalā 20. கூர்வாட் கண்ணியர் கொடுமையிற் படாதருள் கூர்ந்தெனைச் சேர்ந்தரு ளருணாசலா 20. kūrvāṭ kaṇṇiyar koṭumaiyiṟ paṭātaruḷ kūrnteṉaic cērntaru ḷaruṇācalā 21. கெஞ்சியும் வஞ்சியாய்க் கொஞ்சமு மிரங்கிலை யஞ்சலென் றேயரு ளருணாசலா 21. keñciyum vañciyāyk koñcamu miraṅkilai yañcaleṉ ṟēyaru ḷaruṇācalā 22. கேளா தளிக்குமுன் கேடில் புகழைக் கேடுசெய் யாதரு ளருணாசலா 22. kēḷā taḷikkumuṉ kēṭil pukaḻaik kēṭucey yātaru ḷaruṇācalā 23. கையினிற் கனியுன் மெய்ரசங் கொண்டுவ கைவெறி கொளவரு ளருணாசலா 23. kaiyiṉiṟ kaṉiyuṉ meyracaṅ koṇṭuva kaiveṟi koḷavaru ḷaruṇācalā 24. கொடியிட் டடியரைக் கொல்லுனைக் கட்டிக் கொண்டெங்ஙன் வாழ்வே னருணாசலா 24. koṭiyiṭ ṭaṭiyaraik kolluṉaik kaṭṭik koṇṭeṅṅaṉ vāḻvē ṉaruṇācalā 25. கோபமில் குணத்தோய் குறியா யெனைக்கொளக் குறையென் செய்தே னருணாசலா 25. kōpamil kuṇattōy kuṟiyā yeṉaikkoḷak kuṟaiyeṉ ceytē ṉaruṇācalā 26. கௌதமர் போற்றுங் கருணைமா மலையே கடைக்கணித் தாள்வா யருணாசலா 26. kautamar pōṟṟuṅ karuṇaimā malaiyē kaṭaikkaṇit tāḷvā yaruṇācalā 27. சகலமும் விழுங்குங் கதிரொளி யினமன சலச மலர்த்தியி டருணாசலா 27. cakalamum viḻuṅkuṅ katiroḷi yiṉamaṉa calaca malarttiyi ṭaruṇācalā 28. சாப்பா டுன்னைச் சார்ந்துண வாயான் சாந்தமாய்ப் போவ னருணாசலா 28. cāppā ṭuṉṉaic cārntuṇa vāyāṉ cāntamāyp pōva ṉaruṇācalā 29. சித்தங் குளிரக்கதி ரத்தம்வைத் தமுதவா யைத்திற வருண்மதி யருணாசலா 29. cittaṅ kuḷirakkati rattamvait tamutavā yaittiṟa varuṇmati yaruṇācalā 30. சீரை யழித்துநிர் வாணமாச் செய்தருட் சீரை யளித்தரு ளருணாசலா 30. cīrai yaḻittunir vāṇamāc ceytaruṭ cīrai yaḷittaru ḷaruṇācalā 31. சுகக்கடல் பொங்கச் சொல்லுணர் வடங்கச் சும்மா பொருந்திடங் கருணாசலா 31. cukakkaṭal poṅkac colluṇar vaṭaṅkac cummā poruntiṭaṅ karuṇācalā 32. சூதுசெய் தென்னைச் சோதியா தினியுன் சோதி யுருக்காட் டருணாசலா 32. cūtucey teṉṉaic cōtiyā tiṉiyuṉ cōti yurukkāṭ ṭaruṇācalā 33. செப்படி வித்தைகற் றிப்படி மயக்குவிட் டுருப்படு வித்தைகாட் டருணாசலா 33. ceppaṭi vittaikaṟ ṟippaṭi mayakkuviṭ ṭuruppaṭu vittaikāṭ ṭaruṇācalā 34. சேரா யெனின்மெய் நீரா யுருகிக்கண் ணீராற் றழிவே னருணாசலா 34. cērā yeṉiṉmey nīrā yurukikkaṇ ṇīrāṟ ṟaḻivē ṉaruṇācalā 35. சையெனத் தள்ளிற் செய்வினை சுடுமலா லுய்வகை யேதுரை யருணாசலா 35. caiyeṉat taḷḷiṟ ceyviṉai cuṭumalā luyvakai yēturai yaruṇācalā 36. சொல்லாது சொலிநீ சொல்லற நில்லென்று சும்மா விருந்தா யருணாசலா 36. collātu colinī collaṟa nilleṉṟu cummā viruntā yaruṇācalā 37. சோம்பியாய்ச் சும்மா சுகமுண் டுறங்கிடிற் சொல்வே றென்கதி யருணாசலா 37. cōmpiyāyc cummā cukamuṇ ṭuṟaṅkiṭiṟ colvē ṟeṉkati yaruṇācalā 38. சௌரியங் காட்டினை சழக்கற்ற தென்றே சலியா திருந்தா யருணாசலா 38. cauriyaṅ kāṭṭiṉai caḻakkaṟṟa teṉṟē caliyā tiruntā yaruṇācalā 39. ஞமலியிற் கேடா நானென் னுறுதியா னாடிநின் னுறுவே னருணாசலா 39. ñamaliyiṟ kēṭā nāṉeṉ ṉuṟutiyā ṉāṭiniṉ ṉuṟuvē ṉaruṇācalā 40. ஞானமில் லாதுன் னாசையாற் றளர்வற ஞானந் தெரித்தரு ளருணாசலா 40. ñāṉamil lātuṉ ṉācaiyāṟ ṟaḷarvaṟa ñāṉan terittaru ḷaruṇācalā 41. ஞிமிறுபோ னீயு மலர்ந்திலை யென்றே நேர்நின் றனையென் னருணாசலா 41. ñimiṟupō ṉīyu malarntilai yeṉṟē nērniṉ ṟaṉaiyeṉ ṉaruṇācalā 42. தத்துவந் தெரியா தத்தனை யுற்றாய் தத்துவ மிதுவென் னருணாசலா 42. tattuvan teriyā tattaṉai yuṟṟāy tattuva mituveṉ ṉaruṇācalā 43. தானே தானே தத்துவ மிதனைத் தானே காட்டுவா யருணாசலா 43. tāṉē tāṉē tattuva mitaṉait tāṉē kāṭṭuvā yaruṇācalā 44. திரும்பி யகந்தனைத் தினமகக் கண்காண் டெரியுமென் றனையென் னருணாசலா 44. tirumpi yakantaṉait tiṉamakak kaṇkāṇ ṭeriyumeṉ ṟaṉaiyeṉ ṉaruṇācalā 45. தீரமி லகத்திற் றேடியுந் தனையான் றிரும்பவுற் றேனரு ளருணாசலா 45. tīrami lakattiṟ ṟēṭiyun taṉaiyāṉ ṟirumpavuṟ ṟēṉaru ḷaruṇācalā 46. துப்பறி வில்லா விப்பிறப் பென்பய னொப்பிட வாயே னருணாசலா 46. tuppaṟi villā vippiṟap peṉpaya ṉoppiṭa vāyē ṉaruṇācalā 47. தூய்மன மொழியர் தோயுமுன் மெய்யகந் தோயவே யருளென் னருணாசலா 47. tūymaṉa moḻiyar tōyumuṉ meyyakan tōyavē yaruḷeṉ ṉaruṇācalā 48. தெய்வமென் றுன்னைச் சாரவே யென்னைச் சேர வொழித்தா யருணாசலா 48. teyvameṉ ṟuṉṉaic cāravē yeṉṉaic cēra voḻittā yaruṇācalā 49. தேடா துற்றநற் றிருவரு ணிதியகத் தியக்கந் தீர்த்தரு ளருணாசலா 49. tēṭā tuṟṟanaṟ ṟiruvaru ṇitiyakat tiyakkan tīrttaru ḷaruṇācalā 50. தைரிய மோடுமுன் மெய்யக நாடயான் றட்டழிந் தேனரு ளருணாசலா 50. tairiya mōṭumuṉ meyyaka nāṭayāṉ ṟaṭṭaḻin tēṉaru ḷaruṇācalā 51. தொட்டருட் கைமெய் கட்டிடா யெனிலியா னட்டமா வேனரு ளருணாசலா 51. toṭṭaruṭ kaimey kaṭṭiṭā yeṉiliyā ṉaṭṭamā vēṉaru ḷaruṇācalā 52. தோடமி னீயகத் தோடொன்றி யென்றுஞ்சந் தோடமொன் றிடவரு ளருணாசலா 52. tōṭami ṉīyakat tōṭoṉṟi yeṉṟuñcan tōṭamoṉ ṟiṭavaru ḷaruṇācalā 53. நகைக்கிட மிலைநின் னாடிய வெனையரு ணகையிட்டுப் பார்நீ யருணாசலா 53. nakaikkiṭa milainiṉ ṉāṭiya veṉaiyaru ṇakaiyiṭṭup pārnī yaruṇācalā 54. நாணிலை நாடிட நானா யொன்றிநீ தாணுவா நின்றனை யருணாசலா 54. nāṇilai nāṭiṭa nāṉā yoṉṟinī tāṇuvā niṉṟaṉai yaruṇācalā 55. நின்னெரி யெரித்தெனை நீறாக் கிடுமுன் னின்னருண் மழைபொழி யருணாசலா 55. niṉṉeri yeritteṉai nīṟāk kiṭumuṉ ṉiṉṉaruṇ maḻaipoḻi yaruṇācalā 56. நீநா னறப்புலி நிதங்களி மயமா நின்றிடு நிலையரு ளருணாசலா 56. nīnā ṉaṟappuli nitaṅkaḷi mayamā niṉṟiṭu nilaiyaru ḷaruṇācalā 57. நுண்ணுரு வுனையான் விண்ணுரு நண்ணிட வெண்ணலை யிறுமென் றருணாசலா 57. nuṇṇuru vuṉaiyāṉ viṇṇuru naṇṇiṭa veṇṇalai yiṟumeṉ ṟaruṇācalā 58. நூலறி வறியாப் பேதைய னென்றன் மாலறி வறுத்தரு ளருணாசலா 58. nūlaṟi vaṟiyāp pētaiya ṉeṉṟaṉ mālaṟi vaṟuttaru ḷaruṇācalā 59. நெக்குநெக் குருகியான் புக்கிட வுனைப்புக னக்கனா நின்றனை யருணாசலா 59. nekkunek kurukiyāṉ pukkiṭa vuṉaippuka ṉakkaṉā niṉṟaṉai yaruṇācalā 60. நேசமி லெனக்குன் னாசையைக் காட்டிநீ மோசஞ் செயாதரு ளருணாசலா 60. nēcami leṉakkuṉ ṉācaiyaik kāṭṭinī mōcañ ceyātaru ḷaruṇācalā 61. நைந்தழி கனியா னலனிலை பதத்தி னாடியுட் கொள்நல மருணாசலா 61. naintaḻi kaṉiyā ṉalaṉilai patatti ṉāṭiyuṭ koḷnala maruṇācalā 62. நொந்திடா துன்றனைத் தந்தெனைக் கொண்டிலை யந்தக னீயெனக் கருணாசலா 62. nontiṭā tuṉṟaṉait tanteṉaik koṇṭilai yantaka ṉīyeṉak karuṇācalā 63. நோக்கியே கருதிமெய் தாக்கியே பக்குவ மாக்கிநீ யாண்டரு ளருணாசலா 63. nōkkiyē karutimey tākkiyē pakkuva mākkinī yāṇṭaru ḷaruṇācalā 64. பற்றிமால் விடந்தலை யுற்றிறு முனமருள் பற்றிட வருள்புரி யருணாசலா 64. paṟṟimāl viṭantalai yuṟṟiṟu muṉamaruḷ paṟṟiṭa varuḷpuri yaruṇācalā 65. பார்த்தருண் மாலறப் பார்த்திலை யெனினருள் பாருனக் கார்சொல்வ ரருணாசலா 65. pārttaruṇ mālaṟap pārttilai yeṉiṉaruḷ pāruṉak kārcolva raruṇācalā 66. பித்துவிட் டுனைநேர் பித்தனாக் கினையருள் பித்தந் தெளிமருந் தருணாசலா 66. pittuviṭ ṭuṉainēr pittaṉāk kiṉaiyaruḷ pittan teḷimarun taruṇācalā 67. பீதியி லுனைச்சார் பீதியி லெனைச்சேர் பீதியுன் றனக்கே னருணாசலா 67. pītiyi luṉaiccār pītiyi leṉaiccēr pītiyuṉ ṟaṉakkē ṉaruṇācalā 68. புல்லறி வேதுரை நல்லறி வேதுரை புல்லிட வேயரு ளருணாசலா 68. pullaṟi vēturai nallaṟi vēturai pulliṭa vēyaru ḷaruṇācalā 69. பூமண மாமனம் பூரண மணங்கொளப் பூரண மணமரு ளருணாசலா 69. pūmaṇa māmaṉam pūraṇa maṇaṅkoḷap pūraṇa maṇamaru ḷaruṇācalā 70. பெயர்நினைத் திடவே பிடித்திழுத் தனையுன் பெருமையா ரறிவா ரருணாசலா 70. peyarniṉait tiṭavē piṭittiḻut taṉaiyuṉ perumaiyā raṟivā raruṇācalā 71. பேய்த்தனம் விடவிடாப் பேயாப் பிடித்தெனைப் பேயனாக் கினையென் னருணாசலா 71. pēyttaṉam viṭaviṭāp pēyāp piṭitteṉaip pēyaṉāk kiṉaiyeṉ ṉaruṇācalā 72. பைங்கொடி யாநான் பற்றின்றி வாடாமற் பற்றுக்கோ டாய்க்கா வருணாசலா 72. paiṅkoṭi yānāṉ paṟṟiṉṟi vāṭāmaṟ paṟṟukkō ṭāykkā varuṇācalā 73. பொடியான் மயக்கியென் போதத்தைப் பறித்துன் போதத்தைக் காட்டினை யருணாசலா 73. poṭiyāṉ mayakkiyeṉ pōtattaip paṟittuṉ pōtattaik kāṭṭiṉai yaruṇācalā 74. போக்கும் வரவுமில் பொதுவெளி யினிலருட் போராட் டங்காட் டருணாசலா 74. pōkkum varavumil potuveḷi yiṉilaruṭ pōrāṭ ṭaṅkāṭ ṭaruṇācalā 75. பௌதிக மாமுடற் பற்றற்று நாளுமுன் பவிசுகண் டுறவரு ளருணாசலா 75. pautika māmuṭaṟ paṟṟaṟṟu nāḷumuṉ pavicukaṇ ṭuṟavaru ḷaruṇācalā 76. மலைமருந் திடநீ மலைத்திட வோவருண் மலைமருந் தாயொளி ரருணாசலா 76. malaimarun tiṭanī malaittiṭa vōvaruṇ malaimarun tāyoḷi raruṇācalā 77. மானங்கொண் டுறுபவர் மானத்தை யழித்தபி மானமில் லாதொளி ரருணாசலா 77. māṉaṅkoṇ ṭuṟupavar māṉattai yaḻittapi māṉamil lātoḷi raruṇācalā 78. மிஞ்சிடிற் கெஞ்சிடுங் கொஞ்ச வறிவனியான் வஞ்சியா தருளெனை யருணாசலா 78. miñciṭiṟ keñciṭuṅ koñca vaṟivaṉiyāṉ vañciyā taruḷeṉai yaruṇācalā 79. மீகாம னில்லாமன் மாகாற் றலைகல மாகாமற் காத்தரு ளருணாசலா 79. mīkāma ṉillāmaṉ mākāṟ ṟalaikala mākāmaṟ kāttaru ḷaruṇācalā 80. முடியடி காணா முடிவிடுத் தனைநேர் முடிவிடக் கடனிலை யருணாசலா 80. muṭiyaṭi kāṇā muṭiviṭut taṉainēr muṭiviṭak kaṭaṉilai yaruṇācalā 81. மூக்கிலன் முன்காட்டு முகுரமா காதெனைத் தூக்கி யணைந்தரு ளருணாசலா 81. mūkkilaṉ muṉkāṭṭu mukuramā kāteṉait tūkki yaṇaintaru ḷaruṇācalā 82. மெய்யகத் தின்மன மென்மல ரணையினா மெய்கலந் திடவரு ளருணாசலா 82. meyyakat tiṉmaṉa meṉmala raṇaiyiṉā meykalan tiṭavaru ḷaruṇācalā 83. மேன்மேற் றாழ்ந்திடு மெல்லியர்ச் சேர்ந்துநீ மேன்மையுற் றனையென் னருணாசலா 83. mēṉmēṟ ṟāḻntiṭu melliyarc cērntunī mēṉmaiyuṟ ṟaṉaiyeṉ ṉaruṇācalā 84. மைமய னீத்தருண் மையினா லுனதுண் மைவச மாக்கினை யருணாசலா 84. maimaya ṉīttaruṇ maiyiṉā luṉatuṇ maivaca mākkiṉai yaruṇācalā 85. மொட்டை யடித்தெனை வெட்ட வெளியினீ நட்டமா டினையென் னருணாசலா 85. moṭṭai yaṭitteṉai veṭṭa veḷiyiṉī naṭṭamā ṭiṉaiyeṉ ṉaruṇācalā 86. மோகந் தவிர்த்துன் மோகமா வைத்துமென் மோகந்தீ ராயென் னருணாசலா 86. mōkan tavirttuṉ mōkamā vaittumeṉ mōkantī rāyeṉ ṉaruṇācalā 87. மௌனியாய்க் கற்போன் மலரா திருந்தான் மௌனமி தாமோ வருணாசலா 87. mauṉiyāyk kaṟpōṉ malarā tiruntāṉ mauṉami tāmō varuṇācalā 88. யவனென் வாயின் மண்ணினை யட்டி யென்பிழைப் பொழித்த தருணாசலா 88. yavaṉeṉ vāyiṉ maṇṇiṉai yaṭṭi yeṉpiḻaip poḻitta taruṇācalā 89. யாருமறி யாதென் மதியினை மருட்டி யெவர்கொளை கொண்ட தருணாசலா 89. yārumaṟi yāteṉ matiyiṉai maruṭṭi yevarkoḷai koṇṭa taruṇācalā 90. ரமணனென் றுரைத்தேன் ரோசங் கொளாதெனை ரமித்திடச் செயவா வருணாசலா 90. ramaṇaṉeṉ ṟuraittēṉ rōcaṅ koḷāteṉai ramittiṭac ceyavā varuṇācalā 91. ராப்பக லில்லா வெறுவெளி வீட்டில் ரமித்திடு வோம்வா வருணாசலா 91. rāppaka lillā veṟuveḷi vīṭṭil ramittiṭu vōmvā varuṇācalā 92. லட்சியம் வைத்தரு ளஸ்திரம் விட்டெனைப் பட்சித்தாய் பிராணனோ டருணாசலா 92. laṭciyam vaittaru ḷastiram viṭṭeṉaip paṭcittāy pirāṇaṉō ṭaruṇācalā 93. லாபநீ யிகபர லாபமி லெனையுற்று லாபமென் னுற்றனை யருணாசலா 93. lāpanī yikapara lāpami leṉaiyuṟṟu lāpameṉ ṉuṟṟaṉai yaruṇācalā 94. வரும்படி சொலிலை வந்தென் படியள வருந்திடுன் றலைவிதி யருணாசலா 94. varumpaṭi colilai vanteṉ paṭiyaḷa varuntiṭuṉ ṟalaiviti yaruṇācalā 95. வாவென் றகம்புக்குன் வாழ்வரு ளன்றேயென் வாழ்விழந் தேனரு ளருணாசலா 95. vāveṉ ṟakampukkuṉ vāḻvaru ḷaṉṟēyeṉ vāḻviḻan tēṉaru ḷaruṇācalā 96. விட்டிடிற் கட்டமாம் விட்டிடா துனையுயிர் விட்டிட வருள்புரி யருணாசலா 96. viṭṭiṭiṟ kaṭṭamām viṭṭiṭā tuṉaiyuyir viṭṭiṭa varuḷpuri yaruṇācalā 97. வீடுவிட் டீர்த்துள வீடுபுக்குப் பையவுன் வீடுகாட் டினையரு ளருணாசலா 97. vīṭuviṭ ṭīrttuḷa vīṭupukkup paiyavuṉ vīṭukāṭ ṭiṉaiyaru ḷaruṇācalā 98. வெளிவிட்டே னுன்செயல் வெறுத்திடா துன்னருள் வெளிவிட் டெனைக்கா வருணாசலா 98. veḷiviṭṭē ṉuṉceyal veṟuttiṭā tuṉṉaruḷ veḷiviṭ ṭeṉaikkā varuṇācalā 99. வேதாந் தத்தே வேறற விளங்கும் வேதப் பொருளரு ளருணாசலா 99. vētān tattē vēṟaṟa viḷaṅkum vētap poruḷaru ḷaruṇācalā 100. வைதலை வாழ்த்தா வைத்தருட் குடியா வைத்தெனை விடாதரு ளருணாசலா 100. vaitalai vāḻttā vaittaruṭ kuṭiyā vaitteṉai viṭātaru ḷaruṇācalā 101. அம்புவி லாலிபோ லன்புரு வுனிலெனை யன்பாக் கரைத்தரு ளருணாசலா 101. ampuvi lālipō laṉpuru vuṉileṉai yaṉpāk karaittaru ḷaruṇācalā 102. அருணையென் றெண்ணயா னருட்கண்ணி பட்டேனுன் னருள்வலை தப்புமோ வருணாசலா 102. aruṇaiyeṉ ṟeṇṇayā ṉaruṭkaṇṇi paṭṭēṉuṉ ṉaruḷvalai tappumō varuṇācalā 103. சிந்தித் தருட்படச் சிலந்திபோற் கட்டிச் சிறையிட் டுண்டனை யருணாசலா 103. cintit taruṭpaṭac cilantipōṟ kaṭṭic ciṟaiyiṭ ṭuṇṭaṉai yaruṇācalā 104. அன்பொடுன் னாமங்கே ளன்பர்த மன்பருக் கன்பனா யிடவரு ளருணாசலா 104. aṉpoṭuṉ ṉāmaṅkē ḷaṉparta maṉparuk kaṉpaṉā yiṭavaru ḷaruṇācalā 105. என்போலுந் தீனரை யின்புறக் காத்துநீ யெந்நாளும் வாழ்ந்தரு ளருணாசலா 105. eṉpōlun tīṉarai yiṉpuṟak kāttunī yennāḷum vāḻntaru ḷaruṇācalā 106. என்புரு கன்பர்த மின்சொற்கொள் செவியுமென் புன்மொழி கொளவரு ளருணாசலா 106. eṉpuru kaṉparta miṉcoṟkoḷ ceviyumeṉ puṉmoḻi koḷavaru ḷaruṇācalā 107. பொறுமையாம் பூதர புன்சொலை நன்சொலாப் பொறுத்தரு ளிஷ்டம்பின் னருணாசலா 107. poṟumaiyām pūtara puṉcolai naṉcolāp poṟuttaru ḷiṣṭampiṉ ṉaruṇācalā 108. மாலை யளித்தரு ணாசல ரமணவென் மாலை யணிந்தரு ளருணாசலா 108. mālai yaḷittaru ṇācala ramaṇaveṉ mālai yaṇintaru ḷaruṇācalā அருணா சலசிவ அருணா சலசிவ அருணா சலசிவ அருணாசலா! அருணா சலசிவ அருணா சலசிவ அருணா சலசிவ அருணாசலா! aruṇā calaciva aruṇā calaciva aruṇā calaciva aruṇācalā! aruṇā calaciva aruṇā calaciva aruṇā calaciva aruṇācalā! அருணா சலம்வாழி யன்பர் களும்வாழி அக்ஷர மணமாலை வாழி. aruṇā calamvāḻi yaṉpar kaḷumvāḻi akṣara maṇamālai vāḻi.