Ekanma Pancakam by Ramana Maharshi Verse 1 தன்னை மறந்து தனுவேதா னாவெண்ணி யெண்ணில் பிறவி யெடுத்திறுதி — தன்னை யுணர்ந்துதா னாத லுலகசஞ் சாரக் கனவின் விழித்தலே காண். taṉṉai maṟandu taṉuvēdā ṉāveṇṇi yeṇṇil piṟavi yeḍuttiṟudi — taṉṉai yuṇarndudā ṉāda lulahasañ cārak kaṉaviṉ viṙittalē kāṇ. Verse 2 தானிருந்துந் தானாகத் தன்னைத்தா னானெவன் யானிருக்குந் தான மெதுவெனக்கேட் — பானுக்கு யானெவ னெவ்விடம் யானுள னென்றமது பானனை யீடு பகர். tāṉirundun dāṉāhat taṉṉaittā ṉāṉevaṉ yāṉirukkun thāṉa meduveṉakkēṭ — pāṉukku yāṉeva ṉevviḍam yāṉuḷa ṉeṉḏṟamadhu pāṉaṉai yīḍu pagar. Verse 3 தன்னுட் டனுவிருக்கத் தானச் சடவுடலந் தன்னு ளிருப்பதாத் தானுன்னு — மன்னவன் சித்திரத்தி னுள்ளுளதச் சித்திரத்துக் காதார வத்திர மென்றெண்ணு வான். taṉṉuṭ ṭaṉuvirukkat tāṉac caḍavuḍalan taṉṉu ḷiruppadāt tāṉuṉṉu — maṉṉavaṉ cittiratti ṉuḷḷuḷadac cittirattuk kādhāra vattira meṉḏṟeṇṇu vāṉ. Verse 4 பொன்னுக்கு வேறாகப் பூடண முள்ளதோ தன்னை விடுத்துத் தனுவேது — தன்னைத் தனுவென்பா னஞ்ஞானி தானாகக் கொள்வான் றனையறிந்த ஞானி தரி. poṉṉukku vēṟāhap pūṭaṇa muḷḷadō taṉṉai viḍuttut taṉuvēdu — taṉṉait taṉuveṉbā ṉaññāṉi tāṉāhak koḷvāṉ ḏṟaṉaiyaṟinda ñāṉi tari. Verse 5 எப்போது முள்ளதவ் வேகான்ம வத்துவே யப்போதவ் வத்துவை யாதிகுரு — செப்பாது செப்பித் தெரியுமா செய்தன ரேலெவர் செப்பித் தெரிவிப்பர் செப்பு. eppōdu muḷḷadav vēkāṉma vattuvē yappōdav vattuvai yādiguru — seppādu seppit teriyumā seydaṉa rēlevar seppit terivippar ceppu.