Appala Pattu by Ramana Maharshi Pallavi Refrain அப்பள மிட்டுப் பாரு — அத்தைச் சாப்பிட்டுன் னாசையைத் தீரு. appaḷa miṭṭup pāru - attaic cāppiṭṭuṉ ṉāśaiyait tīru. Anupallavi Sub-refrain இப்புவி தன்னி லேங்கித் திரியாமற் சற்போ தசுக சற்குரு வானவர் செப்பாது சொன்ன தத்துவ மாகிற வொப்புயர் வில்லா வோர்மொழி யின்படி (அப்) ibbhuvi taṉṉi lēṅgit tiriyāmaṯ saṯbhō dasukha saṯguru vāṉavar seppādu soṉṉa tattuva māhiṟa voppuyar villā vōrmoṙi yiṉpaḍi (ap) Verse 1 தானல்லா வைங்கோச க்ஷேத்ர மிதில்வளர் தானென்னு மானமாந் தான்ய வுளுந்தை நானாரென் ஞான விசாரத் திரிகையி னானல்ல வென்றே யுடைத்துப் பொடித்து (அப்) tāṉallā vaiṅkōśa kṣētra midilvaḷar tāṉeṉṉu māṉamān tāṉya vuḷundai nāṉāreṉ ñāṉa vicārat tirigaiyi ṉāṉalla veṉḏṟē yuḍaittup poḍittu (ap) Verse 2 சத்சங்க மாகும் பிரண்டை ரசத்தொடு சமதம மாகின்ற ஜீரக மிளகுட னுபரதி யாகுமவ் வுப்போ டுள்ளநல் வாசனை யாம்பெருங் காயமுஞ் சேர்த்து (அப்) satsaṅga māhum piraṇḍai rasattoḍu śamadama māhiṉḏṟa jīraka miḷahuḍa ṉuparati yāhumav vuppō ḍuḷḷanal vāsaṉai yāmperuṅ gāyamuñ cērttu (ap) Verse 3 கன்னெஞ்சி னானா னென்று கலங்காம லுண்முக வுலக்கையா லோயா திடித்து சாந்தமாங் குழவியாற் சமமான பலகையிற் சந்ததஞ் சலிப்பற சந்தோஷ மாகவே (அப்) kaṉṉeñji ṉāṉā ṉeṉḏṟu kalaṅgāma luṇmukha vulakkaiyā lōyā diḍittu śāntamāṅ guṙaviyāṯ samamāṉa palahaiyiṯ santatañ salippaṟa santōṣa māhavē (ap) Verse 4 மோனமுத் ரையாகு முடிவில்லாப் பாத்ரத்தில் ஞானாக்னி யாற்காயு நற்பிரம்ம நெய்யதி னானது வாகவே நாளும் பொரித்துத் தானே தானாக புஜிக்கத் தன்மய (அப்) mōṉamud raiyāhu muḍivillāp pātrattil ñāṉāgṉi yāṯkāyu naṯbiramma neyyadi ṉāṉadu vāhavē nāḷum porittut tāṉē tāṉāha bhujikkat taṉmaya (ap)