Anma Viddai by Ramana Maharshi Pallavi Refrain by Sri Muruganar ஐயே! யதிசுலபம் — ஆன்மவித்தை ஐயே! யதிசுலபம். aiyē! yatisulabham — āṉmaviddai aiyē! yatisulabham. Anupallavi Sub-refrain by Sri Muruganar நொய்யார் தமக்குமுளங் கையா மலகக்கனி பொய்யா யொழியமிகு மெய்யா யுளதான்மா. (ஐயே) noyyār tamakkumuḷaṅ kaiyā malakakkaṉi poyyā yoṙiyamihu meyyā yuḷadāṉmā. (aiyē) Verse 1 மெய்யாய் நிரந்தரந்தா னையா திருந்திடவும் பொய்யா முடம்புலக மெய்யா முளைத்தெழும்பொய் மையார் நினைவணுவு முய்யா தொடுக்கிடவே மெய்யா ரிதயவெளி வெய்யோன் சுயமான்மா — விளங்குமே; இரு ளடங்குமே; இட ரொடுங்குமே; இன்பம் பொங்குமே. (ஐயே) meyyāy nirantarandā ṉaiyā dirundiḍavum poyyā muḍambulaha meyyā muḷaitteṙumpoy maiyār niṉaivaṇuvu muyyā doḍukkiḍavē meyyā ridayaveḷi veyyōṉ suyamāṉmā — viḷaṅgumē; iru ḷaḍaṅgumē; iḍa roḍuṅgumē; iṉbam poṅgumē. (aiyē) Verse 2 ஊனா ருடலிதுவே நானா மெனுநினைவே நானா நினைவுகள்சே ரோர்நா ரெனுமதனா னானா ரிடமெதென்றுட் போனா னினைவுகள்போய் நானா னெனக்குகையுட் டானாய்த் திகழுமான்ம — ஞானமே; இதுவே மோனமே; ஏக வானமே; இன்பத் தானமே. (ஐயே) ūṉā ruḍaliduvē nāṉā meṉuniṉaivē nāṉā niṉaivugaḷsē rōrnā reṉumadaṉā ṉāṉā riḍamedeṉḏṟuṭ pōṉā ṉiṉaivugaḷpōy nāṉā ṉeṉakkuhaiyuṭ ṭāṉāyt tikaṙumāṉma — ñāṉamē; iduvē mōṉamē; ēka vāṉamē; iṉbat tāṉamē. (aiyē) Verse 3 தன்னை யறிதலின்றிப் பின்னை யெதறிகிலென் றன்னை யறிந்திடிற்பின் னென்னை யுளதறிய பின்ன வுயிர்களில பின்ன விளக்கெனுமத் தன்னைத் தனிலுணர மின்னுந் தனுளான்ம — ப்ரகாசமே; அருள் விலாசமே; அக விநாசமே; இன்ப விகாசமே. (ஐயே) taṉṉai yaṟidaliṉḏṟip piṉṉai yedaṟihileṉ ḏṟaṉṉai yaṟindiḍiṟpiṉ ṉeṉṉai yuḷadaṟiya bhiṉṉa vuyirgaḷila bhiṉṉa viḷakkeṉumat taṉṉait taṉiluṇara miṉṉun taṉuḷāṉma — prakāśamē; aruḷ vilāsamē; aha vināśamē; iṉba vikāsamē. (aiyē) Verse 4 கன்மா திகட்டவிழ சென்மா திநட்டமெழ வெம்மார்க் கமதனினு மிம்மார்க் கமிக்கெளிது சொன்மா னததனுவின் கன்மா திசிறிதின்றிச் சும்மா வமர்ந்திருக்க வம்மா வகத்திலான்ம — சோதியே; நிதானு பூதியே; இராது பீதியே; இன்பவம் போதியே. (ஐயே) kaṉmā dikaṭṭaviṙa jeṉmā dinaṭṭameṙa vemmārg gamadaṉiṉu mimmārg gamikkeḷidu soṉmā ṉadadaṉuviṉ kaṉmā disiṟidiṉḏṟic cummā vamarndirukka vammā vahattilāṉma — jyōtiyē; nitāṉu bhūtiyē; irādu bhītiyē; iṉbavam bhōdhiyē. (aiyē) Verse 5 விண்ணா தியவிளக்குங் கண்ணா தியபொறிக்குங் கண்ணா மனக்கணுக்குங் கண்ணாய் மனவிணுக்கும் விண்ணா யொருபொருள்வே றெண்ணா திருந்தபடி யுண்ணா டுளத்தொளிரு மண்ணா மலையெனான்மா — காணுமே; அருளும் வேணுமே; அன்பு பூணுமே; இன்பு தோணுமே. (ஐயே) viṇṇā diyaviḷakkuṅ kaṇṇā diyapoṟikkuṅ kaṇṇā maṉakkaṇukkuṅ kaṇṇāy maṉaviṇukkum viṇṇā yoruporuḷvē ṟeṇṇā dirundapaḍi yuṇṇā ḍuḷattoḷiru maṇṇā malaiyeṉāṉmā — kāṇumē; aruḷum vēṇumē; aṉbu pūṇumē; iṉbu tōṇumē. (aiyē)